Dr.Padmanabhan Palpu..
"ஈழவர்கள், பொதுவாக கல்வி அறிவு இல்லாதவர்கள் என்பதால், நீங்கள்(ஈழவர்கள்),அரசு பணிகளுக்கு முயற்சி செய்யாமல், உங்கள் குலத் தொழிலான, கள் இறக்குதல், கயிறு திரிப்பது போன்ற தொழில்களை செய்வது தான் நல்லது"!
1891-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ம் தேதி, அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான மன்னன், மூலம் திருநாள் ஆட்சியின் அறிவிப்பு தான் மேற்சொன்ன வரிகள்...
சுவாமி விவேகானந்தர்/நாராயண குரு போன்றவர்களின் சம காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக போராளி தான் டாக்டர். பல்ப்பு...
திருவாங்கூர் சமஸ்தானத்தில், திருவனந்தபுரத்திற்கு அருகே, பேட்டை என்ற ஊரில், வசதி மிக்க ஈழவ குடும்பத்தில் பிறந்தவர் தான் டாக்டர். பல்ப்பு..
1884ம் ஆண்டு, மருத்துவ படிப்பிற்காக நுழைவுத்தேர்வு எழுதி(அந்த காலங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் படிப்புக்கு செல்வதை தடுக்க நுழைவுத்தேர்வு இருந்தது என்பது கவனிக்கத்தக்கது),தேர்வில் 4வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார் இளைஞர் பல்ப்பு; ஆனால், ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த ஈழவரான பல்ப்பு, மருத்துவ கல்வி பெறுவதை மறுத்தது, திருவாங்கூர் மன்னர் ஆட்சி.தனது மருத்துவ கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட பல்ப்பு, புகழ்பெற்ற Madras Medical Collegeல் சேர்ந்து தனது மருத்துவ கல்வியை தொடர்ந்து, இறுதியில் ஒரு மருத்துவராக,தனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார் Dr.Palpu!
ஆனால்,டாக்டர் பல்ப்பு அவர்களுக்கு, தனது சொந்த ஊரில் மருத்துவ பணி புரியும் உரிமையை மறுத்தது, திருவாங்கூர் மன்னர் ஆட்சி...
கொந்தளித்த டாக்டர் பல்ப்பு, ஆவேசத்தை அடக்கிக்கொண்டு, மருத்துவ பணிக்காக மைசூர் சென்றார்; அங்கே அவருக்கு கிடைத்த ஒரு மாத ஊதியம் ரூபாய்100/.
அதே நேரம், திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஒரு மருத்துவருக்கு கிடைத்த ஒரு மாத ஊதியம் ரூபாய் 5(ஐந்து)மட்டுமே...
பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள அந்த வேலை அவருக்கு அந்த நேரம் தேவைப்பட்டது..
ஆனாலும், சுவாமி விவேகானந்தர் அவர்களை சந்தித்து, திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஈழவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும், மன்னர் ஆட்சி எப்படியெல்லாம் இழிவு படுத்தி வருகிறது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.. சுவாமி விவேகானந்தரின் ஆலோசனையின் பேரில், நாராயண குருவையும் சந்தித்து, பின்னர் களத்தில் இறங்கினார் டாக்டர். பல்ப்பு...
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதாவை சந்தித்து, அவரிடமிருந்து ஒரு அறிமுக கடிதத்தை பெற்று,G.P.Pillai என்ற பாரிஸ்டரை,லண்டனுக்கு அனுப்பி, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், திருவாங்கூர் ஆட்சியின் அவலங்கள் குறித்தும், ஈழவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகள் குறித்தும் கேள்வி எழுப்ப முயற்சி செய்தார்..
ஒரு கட்டத்தில், டாக்டர். பல்ப்பு அவர்கள்,பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான, தாதாபாய் நவ்ரோஜியை லண்டனில் சந்தித்து,பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், கேள்வி எழுப்பச் செய்தார்!
இதற்கிடையில்,1903ம் ஆண்டு, Sree Narayana Dharma Paripalana (SNDP) Yogam என்ற ஈழவர்களுக்கான ஒரு புகழ்பெற்ற அமைப்பையும் நிறுவினார்...
டாக்டர் பல்ப்பு அவர்கள் எழுதி வெளியிட்ட"Treatment of Thiyas in Travancore"என்ற ஆங்கில நூல், ஒடுக்கப்பட்ட மக்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் என்னென்ன கொடுமைகளை நேரிட்டனர் என்பவற்றையும், மன்னர் ஆட்சியின் அக்கிரமங்களையும், இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளும் வகையில், மிகச்சிறந்த ஆவணமாக திகழ்கிறது...
Malayali Memorial என்ற பெயரில் அப்போது மன்னர் ஆட்சிக்கு அளித்த மனுக்கள் புகழ் பெற்றவை...
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை மற்றும், அரசுப்பணி பெறும் உரிமைகளையும் பெறுவதற்காக,
13,176 பேர் கையெழுத்திட்ட Eazhava Memorial என்ற கோரிக்கை சாசனத்தில் மூன்றாவதாக,டாக்டர் பல்ப்பு கையெழுத்திட்ட,கோரிக்களுக்கு பதிலாகவே, திருவாங்கூர் மன்னனின் ஆட்சி, பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளைக் குறிப்பிட்டுள்ளது...
தனது சொத்துக்களையும், ஈட்டிய செல்வம் அனைத்தையும், தனது மனைவியின் சொத்துக்கள்அனைத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே செலவு செய்த டாக்டர் பல்ப்பு, இந்திய நாடு, ஒரு குடியரசாக மாறுவதற்கு முந்தைய நாள்,
1950,ஜனவரி மாதம் 25ம் தேதி காலமானார்..
திருவாங்கூர் சமஸ்தானத்தின் கொடிய ஆட்சிக்கு எதிராக களமாடிய,ஈழவர்களுக்காக மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் களமாடிய, டாக்டர். பல்ப்பு, வரலாற்றில் உரிய இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.....
*இது ஒரு முன்னோட்டம் மட்டுமே..
**விரிவாக, அடுத்தடுத்து வரும் பதிவுகளில்.. நன்றி சாகுல்