ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்யலாம்?

இன்றைய டெக் உலகில் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவரே இல்லை. அத்தகைய அத்தியாவசிய ஸ்மார்ட்போன்கள் கைதவறி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?

வாரெண்டி க்ளைய்ம் செய்யலாம்:
---------------------------------------------------------
எல்லா ஸ்மார்ட்போன்களும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருவதில்லை. அந்த வசதி இல்லாத ஸ்மார்ட்போன்கள் நீரில் விழுந்துவிட்டால், அந்த போன் உரிமையாளரின் பாடு திண்டாட்டம்தான். இன்று மார்க்கெட்டில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்து விட்டால் வாரண்டி பெற்றுக்கொள்ளாலாம் என்கிற ரீதியில்தான் விற்கப்படுகின்றன. அது ஒரு விபத்தாகக் கருதப்படும் சூழலில் வாரண்டியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கூடுதல் வார்த்தை உங்கள் ஸ்மார்ட் போன் வாரண்டி ஒப்பந்தத்தில் இருக்கும் பட்சத்தில், இது சாத்தியம். இந்த ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில், வாரண்ட்டி கிளைம் செய்ய
தண்ணீரில் விழுந்தை மறைக்க முயற்சிக்காதீர்கள். ஏனென்றால், தண்ணீரில் மூழ்கிவிட்டால் நிறம் மாறும் சென்சார்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும். கண்டு பிடித்து விடுவார்கள்.

உடனடியாக செயல்படுங்கள்: 
--------------------------------------------------
தண்ணீரில் மூழ்கிய ஸ்மார்ட்போனை உடனடியாக அணைத்து அதிலிருந்து பேட்டரி, மெமரி கார்டு மற்றும் சிம் கார்டை
உடனடியாக அகற்றி விடுங்கள். அந்த பாகங்களில் இருந்து தண்ணீரை சுத்தமான துணி கொண்டு துடைத்து விடுங்கள். ஸ்மார்ட்போனில் இயர்போன், கேபிள் என ஏதேனும் இணைக்கப்பட்டிருந்தால், அதையும் உடனடியாக துண்டித்து விடுங்கள். ஹேர் ட்ரையர் கொண்டு உங்கள் ஸ்மார்ட்போனை உலர்த்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் ஹேர் ட்ரையரிலிருந்து வெளிவரும் வெப்பத்தின் அளவு அதிகம் என்பதால், ஸ்மார்ட்போன்கள் பாதிக்கப்பட  வாய்ப்பு அதிகம்.

நன்னீர் வேறு, கடல்நீர் வேறு:
-------------------------------------------------
நன்னீரில் விழும் ஸ்மார்ட்போன்களை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டுவர வாய்ப்பு உண்டு. ஆனால், உப்புத் தன்மை அதிகம் கொண்ட கடல் நீரில் விழும் ஸ்மார்ட்போன்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஸ்மார்ட் போன்களின் மெட்டல் பாகங்கள் மற்றும் எலெக்ரானிக்ஸ் பாகங்கள் கடல்நீரில் இருக்கும் உப்புத் தன்மையால் பாதிக்கப்படும்.

ஸ்மார்ட்போன் ஆன் ஆகிவிட்டால் பிரச்னை தீர்ந்தது:
-----------------------------------------------------------------------------------
தண்ணீரில் விழுந்த உங்கள் ஸ்மார்ட்போன் மீண்டும் இயக்கத்துக்கு வந்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது என்று பொருள்.
எதற்கும் ஒரு பாதுகாப்புக்கு ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியத் தகவல்களை உடனடியாக வேறு ஒரு ஸ்மார்ட் போனுக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றி விடுங்கள்.
Source: puthiyathalaimurai 18 Jul, 2017
------------------------------------------------