20 குழந்தைகளுக்கு பாலூட்டும் தாயுள்ளம்...

கடந்த வாரம் ஆப்கான் தலைநகரம் காபூலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற தாக்குதலில் பிரசவ வார்டில் அனுமதிக்கபட்டிருந்த 24 பெண்கள் மரணமடைய, நர்சுகள் டாக்டர்கள் உட்பட 80 பேர் படுகாயம் அடைந்தநர்.



மரணமடைந்த பெண்கள் மற்றும் உயிருக்கு போராடுபவர்களின் 20 பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் அவதிப்படும் தகவல்  செய்திகளில் வெளியானது.
பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் தாய்ப்பாலுக்கு ஏங்கும் தகவல் கேள்விப்பட்ட ஆப்கானிஸ்தான் நிதித்துறையில பணியாற்றும்  Feroza Younus Omar எனும்  26 வயதான பெண்மணி பாலூட்ட முன்வந்து மருத்துவமனைக்கு விரைந்தார்...

பிறந்து 14 மாதம் மட்டுமே ஆன தன்னுடைய குழந்தைக்கு காலையில் ஒரு முறை பாலூட்டி விட்டு மருத்துவமனைக்கு செல்லும் feroza சுழற்சி முறையில் கடந்த ஆறு நாட்களாக 20 குழந்தைகளுக்கும் தாயுள்ளதோடு  மாறிமாறி பால் புகட்டும் மகத்தான நற்செயலை செய்து வருகிறார்...
Colachel Azheem