நாமெல்லாம் மருத்துவர்களுக்காகக் கைதட்டினோம்...
மருத்துவர்கள் யாருக்காகக் கைதட்டினார்கள் தெரியுமா?
மனிதம் - பரவட்டும் திக்கெட்டும்! ❤️
'வைரஸ்’ திரைப்படத்திலொரு காட்சி வரும். (நிப்பா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிந்திராத) ஒருவர் கடுமையான இருமலுடன், மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரிடம் செல்வார்.
அந்த ஓட்டுநர் அவரை அண்ட விடாமல் விரட்டுவார். அந்த வழியே ‘பைக்’ இல் வரும் நபரிடம் அவர் ‘லிஃப்ட்’ கேட்கபதற்காக இடைமறிக்க, உடனே ஆட்டோ ஓட்டுநர், “இவருக்கு நிப்பா வைரஸ் இருக்கு போய்விடு...” என்று சொல்ல, ‘பைக்’இல் வந்தவர் பேயைக் கண்டு அரண்டதுபோல ஓடுவார்...
பிறகு அந்த நோயாளி கட்டையால் தாக்கப்படுவது போல் காட்சி முடியும்.
கொரோனாவைரஸ் தொற்று என மதுரையில் ஒரு இளைஞரை ஒரு சிறு லாரியில் எப்படி ஏற்றினார்கள், எப்படி அவரைக் கையாண்டார்கள்; இறுதியில் நோய்த்தொற்றே இல்லாதிருந்தும் சமூகம் தந்த அழுத்தத்தால், அவர் எப்படி தம் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது பற்றிய செய்தியும் அறிந்திருப்போம்.
அடுத்ததாக, மருத்துவப் பணியாளர்களைப் போற்றும் விதமாகக் கைதட்டியும், விளக்கொளியேற்றியும் நன்றி தெரிவித்து செல்ஃபிகளைப் பகிர்ந்தோம், ஆனால்,
அதே மருத்துவர்களில் சிலர் கொரோனாவைரஸ் தெற்றேற்பட்டு மரணமடைந்துவிட்ட நிலையில், அவர் உடலைப் புதைக்க இடம்தர மறுத்து நடந்த பெரும் சோக நிகழ்வுகளையும் அறிந்திருந்தோம்.
இரண்டு நாள்களுக்கு முன் ஸ்பெயினில் என்ன நடந்தது தெரியுமா? நாம் அறிந்திருக்கமாட்டோம்.
உலகில் கொரோனாவைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஸ்பெயினும் ஒன்று. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இருபதாயிரத்திற்கும் அதிகம் இறந்திருக்கிறார்கள். இந்நிலையில், நோய்த் தொற்று ஏற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு இலவசமாகத் தமது டாக்ஸியில் கொண்டுபோய் விடுவதை ஒரு டாக்ஸி டிரைவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
அவர் கொரோனாவைரஸ் நோயாளிகளிடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதை ஒரு சேவையாகவே செய்து வந்திருக்கிறார்.
இதையறிந்த மருத்துவர்கள் இரண்டு நாள்களுக்கு முன் அந்த ஓட்டுநரைத் தொலைபேசியில் அழைத்து மருத்துவமனையிலிருந்து ஒரு நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும். வரமுடியுமா?” என்று கேட்க, உடனே வருகிறேன் என்று மருத்துவமனைக்கு விரைந்து வரவேற்பரையை அடைந்தவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி....
ஆம், நீங்கள் வீடியோவில பார்ப்பதுபோல, அவர் உள்ளே நுழைந்ததும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்திருக்கிறார்கள். ஒன்றும் புரியாமல் விழித்த ஓட்டுநருக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது மருத்துவக்குழு..... பெரிய தொகைக்கான ‘செக்’ ஒன்றினை அளித்திருக்கிறார்கள். மகிழ்வுற்ற ஓட்டுநர் நன்றி தெரிவித்து நெகிழ்கிறார்.
டாக்ஸி ஓட்டுநர் சங்கம் இவரால் பெருமிதம் கொண்டு, “இது சோதனைக்காலம் இல்லை; மனிதர்கள் மனிதம் பரப்ப உகந்த காலமிது!” என்றிருக்கிறது!!
பதிவர்- Rafeeq Sulaiman