அருமையான கிராமியப் பாடல்...

மச்சானைப் பார்த்தீங்களா!


கருக்கலிலே கலப்பையுடன்
கழனிக்குப்போன மச்சான்
வருத்தும் வெய்யில் வந்தபின்னும்
வரக்காணோம் கூழ் குடிக்க!
கம்பங் கூழ் காச்சி வச்சேன்
கண்மாய் மீன் குழம்பு வச்சேன்!
தும்பைப்பூ போலச் சோறு
சுடச்சுடவே ஆக்கி வச்சேன்!
விரா மீனு ஆனங்காச்சி
விருந்தாக்கி வச்சிருக்கேன்!
வரலியே மச்சானும்
வயித்தெவேறே பசிக்கிதிங்கே!
குடிச்சிப்புட்டு மரநிழலில்
கூட்டாளி சனங்களோடு
பிடிச்சபாட்டைப் பாடினாரோ
பின்னே என்ன செஞ்சாரோ!

வயசுப்பொண்ணு வீட்டினிலே
வாக்கப்பட்டு வந்திருக்கேன்
பய மனசு மாறிடுச்சா
பாத்துக்கிறேன் வரட்டுமிங்கே!

நன்றி muthalif