மாதுளம்பழத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன.


இனிப்பு மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கும்.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

மாதுளம் பழ ஜூஸ் தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் நினைவாற்றல் பெருகும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினை
குணமாகும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவிற்குப் பின் ஒரு மாதம் தினமும் சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

(சித்த மருத்துவக் குறிப்புகள்)
நன்றி Muthalib