மீன்பிரியரான நான் அதோடு சேர்ந்து மிதந்து விட்டேன்!!

ஆகச்சிறந்த மீன் குழம்பு என்பது யாதெனில்.....



நல்ல ஒரு கிலோவிற்க்கு குறையாமல் ஒரே மீனாக உயிரோடிருக்கும் விரா  மீனா பார்த்து வாங்கி, அதை குழம்புக்கு தனியா வறுவலுக்கு தனியா வெட்டி, மீன் குழம்புக்கு தேவையான சகல மசாலாக்களை சேர்த்து குறிப்பாக சின்ன வெங்காயம், பச்சமிளகா, வெந்தயம் சேர்த்து நல்லா கொதித்த பின்பு விரா மீன் மண்டையையும் வாலையையும் போட்டு, இறக்கும்போது ஒட்டு மாங்கையை குறுக்கு வெட்டாய் வெட்டி போட்டு இறக்கி, குறுத்து வாழை இலையாய் பார்த்து, அதில் முனை இலையை வெட்டி தண்ணி தெளித்து, வறுத்தமுனுக்கு இரண்டு வச்சு, பொன்னி அரிசியை பதமாய் வடித்து நடுயிலையில் போட்டு, இறக்கி வைத்த மீன் குழம்பை ஊத்தி, குழம்பு மீன்ல கொஞ்சம் வறுத்த மீன்ல கொஞ்சம் சோத்தோட சேர்த்து நாக்குல வச்சா காரமும் புளிப்பும் அப்படியே உச்சந்தலைக்கு ஏறனும். உள்நாக்க தொட்டு தொண்டையில இறங்குனா அமிர்தம் தேவாமிர்தம்......

நன்றி தேவி.