என்ன ஒரு அற்புதமான மனிதர் டாக்டர் ரேலா


மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்த முஹம்மது ரேலா சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமும்  அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்ற டாக்டர் ரேலா எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு M.S பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் அவர் FRCS பட்டமும் பெற்றவர். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணரான அவர் உலகப்புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரியில் 1991 முதல் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

1997 ம் ஆண்டு பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தவர்.

அந்தச் சாதனைக்காக, 2000ம் ஆண்டு டாக்டர் ரேலா வின் பெயர் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றது.


அந்த பெண் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து தற்போது லண்டன் டிரினிடி கல்லூரியில் படித்து வருகிறார் என்பது நவீன மருத்துவத்துறையின் சாதனைகளின் ஒரு மகத்தான சான்றாக கருதப்படுகிறது.



தனது 30 ஆண்டுகால மருத்துவ பயணத்தில் சுமார் 5000 கல்லீரல் மற்றும் கணையம் சம்பந்தப்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்த சாதனையாளராக திகழ்கிறார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக 600க்கும் மேற்பட்ட Scientific publications வெளியிட்டுள்ள உலகின் ஒரே மருத்துவர் என்ற சாதனைக்கும் உரியவர்.

உலகின் தலைசிறந்த 20 குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை நிபுணர்கள் என்ற பட்டியலில் உலகம் முழுதும் உள்ள மருத்துவர்களால் வாக்களிக்கப்பட்டு இடம்பிடித்த பெருமையும் டாக்டர் முஹம்மது ரேலா அவர்களைச் சேரும்.



தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் பிறந்தவர் இன்று இவ்வளவு பிரபலம் ஆனது பெருமைதான்.


அதுவும் உலகம் முழுதும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணராக டாக்டர் முஹம்மது ரேலா சாதனை படைத்துவருவது, மருத்துவ ரீதியாகவும், தமிழர்  என்ற வகையிலும் நமக்கெல்லாம் நிச்சயம் பெருமிதம் தரக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது மிகையாகாது.

More details

https://www.relainstitute.com

https://en.wikipedia.org/wiki/Mohamed_Rela