கொரோனா செயற்கை என்கிறார்கள், இயற்கை என்கிறார்கள், சீனாவின் சதி என்கிறார்கள்?!

#வேலை_இழந்தோர்_பலர்...*

#நிம்மதி_இழந்தோர்_பலர்...*

*வாழ்வாதாரத்தை இழந்து வீட்டு வாடகை கொடுக்க இயலாதவர்கள் பலர்...*

*பசி, பட்டினியால் உயிர் இழந்தவர்கள் பலர்...*

*தன்னுடைய தாய், தகப்பன் இறப்பிற்கு கூட செல்ல இயலாத வெளிநாட்டு வாழ்க்கை...*

*"அன்றாடம் கூலி வேலை செய்தால்தான் சாப்பிட முடியும்" என்ற நிலையில் உள்ளவர்களில் கதியோ...*

*அவர்களின் சோகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது...*

*மனைவி மக்களை பிரிந்து வாடும் ஆண்மகனின் வளைகுடா வாழ்க்கையோ!? செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறான்...*

*செயற்கை என்கிறார்கள், இயற்கை என்கிறார்கள், சீனாவின் சதி என்கிறார்கள், அதில் உள்ள மர்மங்கள் என்ன? அவிழ்க்கப்படாத ரகசியங்கள் என்ன?*

*சேமிப்பும் இல்லை, வேலையும் இல்லை, ஊரடங்கினால் ஊனமானவர்கள் ஏராளம் ஏராளம்...*

*விண்ணை முட்டிய வளர்ச்சி என்றார்கள், வல்லரசுகளின் ராஜ்யம் என்றார்கள், உன் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியாமல் உன்னை தடுத்தது எது?*

*உன் ஆணவமும், அகந்தையும், பகட்டும், வெற்று பெருமையும் சுக்கு நூறாக்கப்பட்டதன் காரணம் என்ன?*

*மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களினால் வீழ்ந்தது மனித நேயம் மட்டுமல்ல...சகோதரத்துவம், சமத்துவமும் தான்...*

*யாரை நம்புவது? புகழிடம் தேடி எங்கே அலைவது? சரியான பாதையை, தீர்வை தருவது யார்?*

*நோய்க்கான நிவாரணம் இல்லாமல் நோயை இறக்குவது இல்லை என்பதன் உண்மை நிலை என்ன?*

அனைத்திற்கும் ஒரே பதில் நம்மை படைத்த நாயனிடம் சரணாகதி அடைவோம்!

*கைகளை உயர்த்தி கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டான் என்பதில் ஆழமான நம்பிக்கை வைப்போம்*

*நம்முடைய ஆடை, உணவுகள், வருமானம் அனைத்தும் யாரையும் ஏமாற்றாமல், யாரையும் வஞ்சிக்காமல் இறை பொருத்தத்தோடு வருகிறதா? என்பதை சுய பரிசோதனை செய்வோம்!*

*"திரை மறைவில் உள்ள உன் சகோதரனுக்காக நீ பிராத்தித்தால் உனக்கும் அதுபோல் கிடைக்கும்" என்பதில் அதிகமதிகம் ஆர்வம் கொள்வோம்*

இறுதியாக நாம் பலகீனமானவர்கள், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விளங்கி முக்காலத்தை அறிந்த ஏக இறைவனிடம் இருகரமேந்தி அசைக்க முடியாத உறுதியுடன் நம்முடைய பிரார்த்தனைகளை வைப்போம்...

*பிரார்த்தனையின் வலிமை லேசானது அல்ல...*

நம்முடைய நேரங்களை ஒதுக்கி நம்முடைய கோரிக்கைகளை வைப்போம்

*"கலப்பற்ற முறையில் பாவமன்னிப்பு கேளுங்கள் - அல்குர்ஆன்*