தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான்!

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான். அவருக்கு அடுத்த பெரிய பணக்காரர் ப.சிதம்பரம்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வாங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகி, ரூ. 10.73 கோடியாக காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம், மற்ற மத்திய அமைச்சர்களின் சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்களாக உள்ளவர்களின் சொத்துக்களைப் பார்க்கும்போது அவர்களில் பெரும் பணக்காரராக ஜெயந்தி நடராஜன்தான் காணப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு 21 கோடியே 69 லட்சத்து 8 ஆயிரத்து 506 ரூபாய் ஆகும். அடுத்த இடத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 11 கோடியே 96 லட்சத்து ஆயிரத்து 906 ஆகும். 3வது இடத்தில் மு.க.அழகிரி உள்ளார்.
தமிழக மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் - மதிப்பு வாரியாக
ஜெயந்தி நடராஜன்: ரூ. 21,69,08,506
ப. சிதம்பரம்: ரூ. 11,96,01,906
மு.க. அழகிரி: ரூ. 9,50,00,000
எஸ். நெப்போலியன்: ரூ. 6,48,92,473
எஸ். ஜெகத்ரட்சகன்: ரூ. 2,42,51,873
பழனி மாணிக்கம்: ரூ. 38,87,586
காந்தி செல்வன்: ரூ. 12,33,524
ஜி.கே. வாசன்: இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் இல்லை.
தயாநிதி மாறன், ராசா ஆகியோர் தற்போது அமைச்சர்களாக இல்லை என்பதால் அவர்களின் சொத்து மதிப்பு குறித்துத் தெரியவில்லை.