துபாய் ஈமான் அமைப்பு நடத்திய அல்ஹம்துலில்லாஹ் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய அல்ஹம்துலில்லாஹ் சிறப்பு நிகழ்ச்சி





PHOTOS : 





துபாய் : துபாய் ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ) அமைப்பு அல்ஹம்துலில்லாஹ் எனும் சிறப்பு ஒலி – ஒளி நிகழ்ச்சியினை 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் வெகு சிறப்புற நடத்தியது.

துவக்கமாக ஈமான் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார்.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் அல்ஹம்துலில்லாஹ் எனும் சிறப்பு நிகழ்வின் மூலம் இறைவனின் படைப்பில் நாம் எத்தகையவர்கள், அதற்காக நாம் இறைவனுக்கு நாம் என்றென்றும் நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதனை அல்ஹம்துலில்லாஹ் எனும் ஒலி – ஒளிக்காட்சி உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.

பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ் ஒலி – ஒளிக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தஞ்சை ஜலாலுத்தீனுக்கு ஈமான் தலைவர் செய்யது எம் ஸலாஹுத்தீன் நினைவுப் பரிசினையும், பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி பூங்கொத்தும் வழங்கி கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அல்ஹம்துலில்லாஹ் நிகழ்வினை தஞ்சை ஜலாலுத்தீன் சுமார் நான்கு மணி நேரம் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் பூதமங்கலம் முஹைதீன் அப்துல் காதர் நன்றி கூறினார். நிகழ்வினை துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் பூதமங்கலம் முஹைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் சிறப்புற செய்திருந்தனர்.