*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி'
என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது
வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும்
அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும்
பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.
*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள் ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை என்பதுதான் விசேஷமே!
*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.
*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன் 2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம் அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில் எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.
* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.
* உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் உள்ளன.
* ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
* ஏப்ரல் என்ற பெயர் "ஏப்பிரிரே' என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. "எல்லாம் இனிதே நிகழும்' என்பது இதன் அர்த்தம்.
* பாரதியார் "பாரதி' என்ற பட்டம் பெற்ற போது அவருக்கு வயது 11.
* ஆங்கிலப் பாடல்கள் எழுதத் துவங்கிய போது சரோஜினி நாயுடுவுக்கு வயது 13.
* அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கிய போது காமராஜருக்கு வயது 17.
* பல்லிகளில் 2,500 வகைகள் உண்டு.
* பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.
* பல்லிகள் மாதக் கணக்கில் உணவின்றி உயிர் வாழும் இயல்பு கொண்டது.
* வாழும் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை பல்லிகளுக்கு உண்டு.
* வீட்டுப் பல்லிகள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழும்.
*பத்திரிகைச் செய்தியாளர்களை நிருபர்கள் என்கிறோம். ஏன் தெரியுமா? முன்பெல்லாம் செய்தியாளர்கள் கடிதங்கள் மூலமே பத்திரிகைகளுக்குச் செய்திகளை அனுப்பி வந்தனர். வடமொழியில் "நிருபம்' என்றால் கடிதம் என்று பொருள். நிருபங்கள் எழுதி வந்ததால் செய்தியாளர்களும் நிருபர்கள் என அழைக்கப்பட்டனர்.
* வெட்டுக் கிளிக்கு கால்களில் தான் காதுகள் உள்ளன.
* நியூசிலாந்தில் காகமே கிடையாது.
* காகத்திற்கு காதுகள் கிடையாது. கண்ணின் பின்புறமுள்ள துளையின் வழியே கேட்கிறது.
* சவுதி அரேபியா நாட்டில் நதிகளே கிடையாது.
* சீனாவின் புனித விலங்காக வணங்கப்படும் விலங்கு பன்றி.
* உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான் தான்.
* எலி, கங்காரு ஆகியவை மிக குறைந்த அளவே தண்ணீர் அருந்துகின்றன.
* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவின் உயரம் 6 அடி. உடலில் பையை உடைய ஒரே விலங்கினம் கங்காரு. கங்காருவின் வால் 4 அடிக்கு மேல் நீளமானது. ஒரே தாவலில் இது 25 முதல் 30 அடிவரை தாண்டி விடும். இதன் குட்டிகள் பிறக்கும் போது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். கங்காருகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. கங்காருகளின் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

இணையத்திலிருந்து