33 பொக்கிஷங்கள்

33 பொக்கிஷங்கள்
33 பொக்கிஷங்கள்

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது!


நன்றி:லப்பைக்குடிகாடு.காம்

படித்துவிட்டீர்களா?
மீண்டும் ஒருமுறை படியுங்களேன்.
ப்ளீஸ்

எகிறப் போகுது செல்போன் கட்டணம்..

எகிறப் போகுது செல்போன் கட்டணம்..

செலவைக் குறைக்க சூப்பர் பிளான்!
''செல்போன் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணம் 17 சதவிகிதம் வரை உயரப்போகிறது...''
பத்திரிகைகளில் வெளியான இந்த செய்தியைப் படித்து விட்டு பதறிப் போனவர்கள் பல ஆயிரம் பேர். காரணம், நடுத்தர வர்க்கத்து வீடுகளின் பட்ஜெட்டில் முக்கியமான இடம் பெற்றிருப்பது செல்போன்களுக்கான செலவு. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று, நான்கு செல்போன்களாவது இருக்கும் நிலையில், அடுத்த மாத பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் எகிறப் போகிறதோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சாமானியர்கள்.
ஒரு காலத்தில் பணக்காரர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தொலைபேசி, காலப்போக்கில் அனைவரது அத்தியாவசியப் பொருளில் ஒன்றாகிப் போனது! 1990-களின் இறுதியில் செல்போன் அறிமுகமான போது இன்கம்மிங் கால்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அதன் பிறகு இன்கம்மிங் கால்களுக்கான கட்டணம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, ஒருகட்டத்தில் இலவசமானது. அடுத்தகட்டமாக இன்னும் நிறையபேர் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து அவுட் கோயிங் கால்களுக்கான கட்டணத்தையும் குறைத்தார்கள். இரவில் போன் செய்தால் எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பதில் ஆரம்பித்து, இலவச எஸ்.எம்.எஸ்-வரை பல்வேறு சலுகைகளைக் கொடுத்து மக்களை இழுத்தன செல்போன் நிறுவனங்கள்.
அப்படி இதுவரை சலுகைகளைக் கொடுத்து வந்த செல்போன் நிறுவனங்கள், இப்போது கட்டணங்களை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏர்செல்லும், டாடா டொகோமோவும் ஏற்கெனவே கட்டணத்தை உயர்த்திவிட்டன. மற்ற மாநிலங்களில் ஏர்டெல், ஐடியா, வோடோஃபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. கூடிய விரைவில் இந்நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் உயர்த்தலாம் என்கிறார்கள்.

செல்போன் நிறுவனங்கள் இப்போது திடீரென கட்டணத்தை உயர்த்த என்ன காரணம்?
இந்தியாவில் சுமார் 60.6 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். (ஆதாரம்: செல்லூலார் ஆபரேட்டர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா- ஜூலை 2011 வரை). செல்போனைப் பயன்படுத்தும் பழக்கம் இந்த வாடிக்கையாளர்களிடம் நன்றாக ஊறிவிட்டது. இனிமேல் இவர்களால் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பதால், கட்டணத்தைக் கொஞ்சம் உயர்த்தினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றன செல்போன் நிறுவனங்கள்.
அடுத்து முக்கிய காரணம், மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகமானது இந்த வசதி. ஒரு நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்பவர்கள் அடுத்த நிறுவனத்துக்கு மாறிக்கொள்ளலாம் என்ற இந்த வசதியை விரும்பியவர்கள் ஏற்கெனவே தாவி முடித்திருப்பார்கள். இப்போது கட்டணத்தை உயர்த்தினால் அவர்கள் இன்னொரு நிறுவனத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் செல்போன் நிறுவனங்கள் நினைக்கின்றன.

மூன்றாவது, செல்போன் நிறுவனங்களின் செலவு. கடந்த சில காலாண்டுகளாகவே செல்போன் நிறுவனங்களின் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாயை 3ஜி லைசென்ஸுக்காகச் செலவு செய்துள்ளன. ஆனால், 3ஜி சேவை மூலம் செல்போன் நிறுவனங்களின் வருமானம் இதுவரை உயரவில்லை. எனவே, கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமான இன்னொரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கட்டணங்கள் குறைவாக இருப்பதால் அனைவரும் அதிகமாக செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் நெருக்கடி அதிகமாகி, அதிக நபர்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. இப்போது கட்டணத்தை அதிகரித்தால் செல்போன் நிறுவனங்களுக்கு இரண்டு விதத்தில் லாபம் கிடைக்கும். நடுத்தர மக்கள் செல்போனுக்கு என ஒரு பட்ஜெட் வைத்திருப்பார்கள், அதைத் தாண்டி அவர்கள் பேச மாட்டார்கள்.

இதனால் நெருக்கடி குறையும். அதே சமயத்தில் கட்டணத்தை அதிகரித்தாலும் அதுபற்றி கவலைப்படாத மேல்தட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை தரமுடியும். அவர்கள் அதிகம் பேசினால், செல்போன் நிறுவனங்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என்று நினைத்துதான் கட்டணத்தை உயர்த்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த கட்டண உயர்வை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், இதை எப்படிச் சமாளிக்கலாம், எந்த பிளானை எடுத்துக் கொண்டால் செலவைக் குறைக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஹ்ஷீuக்ஷீதீவீறீறீதீuபீபீஹ்.நீஷீனீ இணையதளத் தின் சி.இ.ஓ. ஜெய்குமாரிடம் பேசினோம்.
''இப்போதிருக்கும் திட்டங்களில் சிறந்தது எது என்று சொல்ல முடியாது. செல்போனைப் பயன்படுத்துகிறவரின் தேவையை வைத்துதான் எந்த பிளான் சிறந்தது என்பது மாறும். ஆனால், எல்லோருக்கும் பொருந்தி வருகிற மாதிரி, செல்போனுக்காக நாம் செய்யும் செலவை எப்படி எல்லாம் குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதைச் சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தார். இதோ அவர் கொடுத்த முத்தான டிப்ஸ்கள்.

முதலில் உங்களுடைய பிளானில் பழைய பில்களை சரிபாருங்கள். யாருக்கு அதிகம் பேசி இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நெட்வொர்கில் இருக்கும் நண்பர்களுடனா அல்லது வேறு நண்பர்களுடனா, வெளி மாநிலமா, வெளிநாடா என்று பார்த்து, அதற்கேற்ப பிளானை மாற்றுங்கள்.

காலர் டியூன் வைத்திருந் தால் தயவு செய்து நீக்கிவிடுங்கள். அதன் மூலம் மாதம் 30 ரூபாய் மீதமாகும். இதை வைத்துக் கொண்டு குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் பேசலாம். (ஒரு நிமிடத்துக்கு 0.72 பைசா என்றால்). அதேபோல அடிக்கடி பாடல்களை மாற்றாதீர்கள். இதற்கு ஒவ்வொரு முறையும் டவுன்லோடு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வசதி இருப்பவர்கள், பேஸ்புக், கூகுள் டாக், ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்தி செலவில்லாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

இலவச எஸ்.எம்.எஸ்.களை முழுமையாகப் பயன்படுத்தலாம். இலவச எஸ்.எம்.எஸ்.களை வைத்துக் கொண்டு போன் செய்வது கூடுதல் செலவுக்குத்தான் வழி வகுக்கும்.

நிமிடத்துக்கு ஒரு கட்டணம், நொடிக்கு ஒரு கட்டணம் என்பதுபோல இரண்டு வகையான திட்டங்கள் இருக்கிறது. நீங்கள் அதிக நேரம் பேசுபவராக இருந்தால் நொடிக்கு கட்டணம் இருக்கும் திட்டங்களை தவிர்த்துவிடுங்கள். ஒரு நொடிக்கு 1.2 பைசா என்றால், ஒரு நிமிடத்துக்கு 72 பைசா. ஆனால், ஒரு நிமிடத்துக்கு என்றால் 60 பைசா என்று கட்டணம் இருக்கும் பட்சத்தில் ஒரு நிமிடத்துக்கு 12 பைசா நஷ்டம். நீங்கள் எத்தனை நிமிடம் அதிகம் பேசுகிறீர்களோ, அவ்வளவு நிமிடத்துக்கும் 12 பைசா நஷ்டம்.

இதைத் தாண்டி சந்தையில் புதிய பிளான்கள் வரும் பட்சத்தில் அந்த பிளானில் இருக்கும் சிம்மை வாங்கிக் கொள்ளலாம் அல்லது அந்த சர்வீஸ் புரவைடருக்கு நம்பர் போர்ட்டபிலிட்டி மூலம் மாறிக் கொள்ளலாம்''.

நிபுணர் சொன்ன இந்த டிப்ஸ்களைப் பின்பற்றுவதோடு, தேவைப்பட்டால் மட்டுமே செல்போனில் பேசும் பழக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், செலவு நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லையே!

Thanks To http://vikatan.com/

தாய்பாலின் அதிசயங்கள்.

தாய்பாலின் அதிசயங்கள்.
தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

கடைசித்தேதி நெருங்குகி​றது

சிறுபான்மையினர் ஸ்காலர்ஷிப்புக்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

http://momascholarship.gov.in/minority_scholarship/tempStudEntry.html
தீப்பற்றிக் கொண்டால் முதலுதவி முறைகள்....

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்....

* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத்    துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.

* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் - போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.

* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.

* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.

* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.

* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.

* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.

* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.

* தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.

* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.--


கம்பளம் - போர்வை, கோணி
`ஆன்டிசெப்டிக்' மருந்து

தேன்
முட்டையின் வெள்ளைக் கரு
சமையல் சோடா
உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர்
இவையனைத்தும் பெரும்பாலும் எல்லாவீட்டிலும் என்னேரமும் இருக்கக்கூடிய பொருட்களே
.

இவற்றை உபயோகித்து பயனடையும் விதத்தில் அவசியமான இத்தகவல் தந்து, மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையூட்டிய சகோதரர் உமர் ஃபாரூக் அவர்களுக்கு நன்றி.

ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன

இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் என்பது தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.

இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல் இல்லாத லோக்பால் மசோதாவை தூக்கி எறிந்துவிட்டு,ஊழல் செய்யும் நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோரையும் விசாரிக்க வகை செய்யும் வலிமையான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி உருவாகியுள்ள இந்த இயக்கத்தில் ஹசாரே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மல்லிகா சாராபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

"ஊழலுக்கு எதிரான இந்தியா" (India against corruption) என்ற இந்த இயக்கத்தின் இணையதளத்தில், இந்தியாவில் நிலவும் ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு கோபத்தின் வெளிப்பாடே இந்த இயக்கம் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம்/வேண்டுகோள்/அழுத்தம் கொடுக்கவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலை தடுத்து நிறுத்த ஒரு பயனுள்ள செயலாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. .
.
thanks to: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1108/20/1110820026_1.htm

This valuable information wherever possible.

1.  If you see children Begging anywhere in INDIA, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address. http://www.friendstosupport.org/

3. Engineering Students can register in http://www.campuscouncil.com/ to attend Off Campus for 40 Companies.
4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by  Kodaikanal   PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7.  By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
  -Plant more Trees.
  -Don't waste Water & Electricity.      
  -Don't use or burn Plastics

8.  It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"

9.   Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

10.  Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10.
Contact : 9916737471

11. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute  in Adyar, Chennai
Category:  Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone:  044-24910754  044-24910754 ,  044-24911526  044-24911526 ,  044-22350241  044-22350241

12.  Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline.
They will come and collect the food. Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"

ஏஸி பராமரிப்பது ஈஸி!

 தமிழகத்தைப் பொறுத்தவரை ஏ.ஸி இல்லாத கார்களை வாங்குபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினரே! காரில் ஏ.ஸி இருந்தாலும் ஒழுங்காக இயங்கவில்லைஎன்றால், எந்தப் பயனும் இல்லை. கார் ஏ.ஸியைப் பராமரிப்பது எப்படி?

காருக்குள் நாற்றம்!
காருக்குள் ஏ.ஸி இயங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு விதமான துர்நாற்றம் வந்தால், அதற்கு கிருமிகள்தான் காரணம். ஏ.ஸி ஃபேன் கேஸிங்கில் இருக்கும் கூலிங் காயில் அல்லது ஃபில்டரில் பாக்டீரியாக்கள் தங்கி, பல்கி பெருகுவதற்கு மூல காரணம், இங்கே ஏற்படும் அதிகப்படியான ஈரப் பதத்தால், பாக்டீரியாக்கள் தங்க வசதியாக அமைந்து விடுகிறது. இதை நீங்களே சுத்தப்படுத்த முடியாது. பூஞ்சானம், கிருமிகள் தங்குவதைத் தடுப்பதற்கு ஏ.ஸியில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும். அதனால், காரை வீட்டில் நிறுத்தப்போகும் முன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஏ.ஸியை ஆஃப் செய்து விடுங்கள். அப்போதுதான் ஏ.ஸியில் இருக்கும் எவாப்ரேட்டர் ஈரத்தை ஈர்த்து, பாக்டீரியாக்கள் தங்காமல் தடுக்கும்.

ஏ.ஸி எஃபெக்ட் இல்லை!
ஏ.ஸி எஃபெக்ட்டாக இல்லை என்றால், காரை ஆன் செய்து விட்டு தெர்மா மீட்டரை ஏ.ஸி வென்ட்டில் வைத்து செக் செய்யுங்கள். ஆறு முதல் ஒன்பது டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது என்றால், ஏ.ஸி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். ஒன்பது டிகிரிக்கு மேல் இருந்தால், ஏ.ஸியில் பிரச்னை இருக்கிறது. ஏ.ஸியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கேஸ்கெட் மற்றும் ஹோஸ்களில் லீக்கேஜ் ஏற்படும். இதனால், ரெஃப்ரிஜெரன்ட் கேஸ் அளவு குறையும். இதனால் ஏ.ஸி எஃபெக்ட் குறைய வாய்ப்புகள் அதிகம். அதேபோல், ஏர் ஃபில்டரில் தூசு அடைத்திருந்தாலும், ஏ.ஸி எஃபெக்ட் குறையும். அதைச் சுத்தம் செய்யுங்கள். மிகவும் மோசமாக இருந்தால், ஏர் ஃபில்டரை மாற்றி விடுவதே நல்லது!

பெல்ட் மற்றும் கன்டென்ஸர்
ஏ.ஸி அதிக சத்தம் எழுப்பினால், அதிர்வுகள் இருந்தால் கம்ப்ரஸர் மவுன்ட்டிங்கில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். கம்ப்ரஸர் பெல்ட் தளர்வாக இருக்கலாம். கன்டென்ஸர் காயிலில் தூசுகள் அடைத்திருந்தாலும், ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸ் குறையும்.
 
பொதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏ.ஸி மெக்கானிக்கை வைத்து ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸை செக் செய்யுங்கள். காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். அதேபோல், சூரியன் இருக்கும் திசையில் காரின் பின் பக்கம் இருக்கும்படி பார்த்து பார்க் செய்யுங்கள். காரை எடுத்தவுடனேயே ஏ.ஸியை ஆன் செய்யாதீர்கள். காரணம், ஏ.ஸியை முழுவதுமாக கூல் செய்யவே அதிகப்படியான சக்தி இழுக்கும். அது இன்ஜின் பர்ஃபாமென்ஸைப் பாதிக்கும். சிறிது நேரம் ஜன்னல்களை கீழே இறக்கி வைத்து காரை ஓட்டிவிட்டு, இன்ஜின் நன்கு சூடேறிய பிறகே ஏ.ஸியை ஆன் செய்யுங்கள்.

20 டிகிரிக்குக் கீழ் ஏ.ஸி டெம்ப்ரேச்சரை வைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! அதே போல், ஏ.ஸி வென்ட்டுகள் நேராக முகத்துக்கு அடிப்பது போலும் இருக்கக் கூடாது!

thanks to: http://www.vikatan.com/

முதல் இரவு (First Night)



உலகில் பருவ வயதைத் தாண்டிய, சிந்திக்க தெரிந்த எல்லோறும் ஒரு முதல் இரவுக்காக காத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் ஒரே ஒரு உதலிரவே கிடைக்கின்றன, பலர் அந்த முதலிரவை திருமணத்திற்கு முன்னர் அப்படி, இப்படி என்று கற்பனை பண்ணிக்கொன்று அந்த நாளைக்காக காத்திருக்கின்றார்கள்,

இன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் உடலுரவுக் கலையைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மஞ்சள் பத்திரிகைகள்,
ஆபாச திரைப்படங்கள், ஆபாச இணையத்தள பக்கங்கள், ஆபாச கல்வித்திட்டங்கள், மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதனால் அந்த விடயத்தில் உசாராக நடைபோட எத்தனிக்கின்றார்கள்,

இந்த விடயத்தில் நகர் புற பெண்கள் உசாராக இருந்தாலும் கிராமத்துப் பெண்கள் மற்றும் அமைதியான ஒழுக்கமான சூழலில் வாழும் இளம் பெண்களும் அவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நான்கு குணங்களையும் முறையே கொண்டவர்களாக இருக்க முனைவதனால் இதில் கொஞ்சம் மந்த கெதிதான்.

எவ்வளவு தான் இத்துரையில் உசாராக இருந்தாலும் அந்த நாள் நெருங்கும் போது எல்லா இளைஞர், யுவதிகளும் டிம்மாகிவிடுகின்றார்கள்.

சிலர் தாங்கள் பல வருடங்களாக காத்திருந்த, கற்பனை பண்ணியவாறு அந்த முதலிரவை ஒரெ முரையில் காம உணர்ச்சிகளையும் காமப் பசியையும் தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர், இது மிகவும் தவரானதாகும்.

முதலிரவை அடையும் புதிய தன்பதியினர், குறிப்பாக மனமகன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்,
முதலிரவு என்றால் கனவனுக்கும் மனைவிக்குமிடையில் உடலுறவு விடயத்தில் மட்டும் தான் என்பது தவராகும்.

இது மொத்த குடும்ப வாழ்க்கையின் முதலிரவாகும். அதில் காம ஆசையை பகிர்ந்து கொள்வது என்பது அதன் ஒரு பகுதி அல்லது ஒரு அங்கமாகும்,
இந்த இரவில் பல கட்ட அம்சங்கள் நடந்தேர வேண்டும்,
குறிப்பாக,
இந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து உண்ணுவது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் முதல் உணவு,
இந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து புனனகிப்பது அவர்களின் வாழ்க்கையின் முதல் புன்னகை,
அந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து முத்தமிடுவது அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தை அன்பாய் ஆரம்பிக்க செய்யும் ஒரு அன்சமாகும்,
அந்த முதலிரவில் பழைய சில நினைவுகளை, சம்பவங்களை ஞாபகமூட்டல் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும்,
இவ்வாரு பல கட்ட வேலைகள் இருக்கின்றன.
அவைகளில்

முதலில் இருவரும் இணைந்து இரவு உணவை இன்பமாக பரிமாறிக்கொள்ளல்,
இரண்டாவதாக,
பழைய, முந்திய சில சம்பவங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு வந்து இருவரும் சுதந்திரமாக புன்னகைத்துக் கொள்ளல்,
சில நேரம் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில், ஒரே ஊரில் உள்ளவர்களாக இருக்கலாம்,
ஒரே சம்பவத்தில் தொடர்புபட்டவர்களாக இருக்கலாம்,
இந்த சில மறக்க முடியா, சிறிக்கத்தக்க கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது இருவருடைய உள்ளங்களிலும் உடல்களிளும் தேங்கிக்கிடக்கும் ஒரு வித பயம், அச்சம் மெது மெதுவாக நீங்க ஆரம்பிக்கும்,
அந்த புன்னகைகளுடன் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த முக்கியமான கட்டத்திற்கு இருவரும் எத்த முடியும்.

காம உணர்வுகளையும் உடல் பசியையும் தணிக்கின்ற அந்த பொன்னான சந்தர்ப்பம் இது,
இதன் போது நிதானமாக நடந்து கொண்டால் முதலிரவின் இன்பத்தை, அதன் சுவர்க்கத்தை அடைந்து கொள்ள முடியும்,

இருவரும் இணைந்து கலவியில் இன்பமடைந்து ஓய்வு பெற்று விட்டு, அனுவவித்த இன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அதே நேரம் இருவரும் உடலுரவில் இணைந்து கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்:
உடலுறவு கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆ:
"பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்ன ஷ் ஷைத்தான வ ஜன்னிப்னிஸ் ஷைத்தான மா றசக்னா"
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

அதன் பொருள்:
"அல்லாஹ்வின் பெயரால், இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!"

அல்லாஹ்த் தா ஆலா திருமறையில் கூரும் போது:
“மேலும் அவர்கள் எத்தகையோரென்றால், எங்கள் இரட்சகனே எங்கள் மனைவியர்களிடமிருந்தும், எங்கள் சந்ததியகர்களிடமிருந்தும் எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியைத் தந்தருள்வாயாக! அன்றியும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை (நல்வழியில் நின்று அதன்பால் அழைக்கும்) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக என்று (பிராத்தித்துக்) கூறுவார்கள்." (அல் குர்ஆன் - 25: 74).

உடலுரவு முடிந்து உரங்கும் போது உளுச்செய்து கொண்டு உறங்க வேண்டும்,
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளுச்செய்யுங்கள்; உங்கள் பிற உருப்புக்களைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள் என்றார்கள்."
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி

இதே போன்ற ஒரு செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமயாகி) இருக்கும் போது உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத்தூய்மை (உளூ) செய்வது போன்று அங்கத்தூய்மை செய்வார்கள்." ஆதாரம்: முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூரினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவிடம் பாலுறவு கொண்டு விட்டு பின்னர் மீண்டும் (உறவு கொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத்தூய்மை (உளூச்) செய்து கொள்ளட்டும்."
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

முதலிரவு முடிந்து தூங்கிய தம்பதியினர் அதிகாலையில் எழுந்து கடமையான குளிப்பைக் குளித்து கடமையான சுபஹ் தொழுகைக்கு தயாரக வேண்டும்.


Thanks, Changedo

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். 

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.  ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!
"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?
வாசகர்: இளைய வைகை

நன்றி : இந்நேரம்.காம்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு-20​12

டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா சென்ட்ரல் பல்கலைக்கழகம், 2012 சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் இந்தியா முழுவதும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மைனாரிடி பிரிவினருக்கு மட்டும் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நுழைவுத் தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும்.
இந்தத் தேர்வு செப்.11ம் தேதி நடக்கிறது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் நடத்தும் சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகளில் இடம் கிடைத்தவர்களுக்கு இதில் அனுமதி கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தங்குமிடம், நூலக வசதி இலவசம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 கடைசி தேதி. விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு: www.jmi.ac.in/ இமெயில் Shamstarique_2001@yahoo.co.in

இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340
ரக்அத்களின் எண்ணிக்கை

8+3 ரக்அத்கள்
“ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என்
கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344

12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402,

10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339

8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341

4+5 ரக்அத்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ”சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் : புகாரி (117)

8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341)

9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139

7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 5,3,

1 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

மொபைல் பேங்கிங்

மொபைல் பேங்கிங்

இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி)மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
 
இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன. ஆனால் வங்கிகளின் மொபைல் வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆகும் மொபைல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
சில வங்கிகள் தனிப்பட்ட ஒரு மென்பொருளை ஒவ்வொருவருடைய கைபேசியிலும் (மொபைல் போனில்)உட்செலுத்தி தனி நபர் மொபைல் பேங்கிங் சேவையை அளிக்கத் துவங்கி உள்ளன. ஆனால் ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இம்முறையைச் செயல்படுத்துவது மிகவும் சுலபம். வங்கிகளின் இந்த புதிய முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
 
மொபைல் பேங்கிங் - அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
 
உங்கள் மொபைல்போன் மூலம், ஒரு நாளில் ரூ.5000 வரைப் பணப்பரிமாற்றமும், ரூ 10,000 வரை வர்த்தகப் பரிமாற்றங்களிலும் நீங்கள் ஈடுபடலாம்.

உரிமம் பெற்ற, நெறிபடுத்தப்பட்ட வங்கிகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகள் மூலமாகவோ அல்லது வர்த்தக செயலர்கள் மூலமாகவோ மொபைல் பேங்கிங் சேவையை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வங்கியில் கணக்கு வைத்திருப்போர், வங்கியின் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பெற்றவர்கள், இச்சேவைகளைப் பெறலாம்.
தற்சமயம், மொபைல் பேங்கிங் சேவை உள்நாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மொபைல் பேங்கிங் சேவையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள் வங்கிகளின் குறை தீர்ப்பாளர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

சேவையைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் மற்றும் இடர்பாடுகளைப் பற்றி வங்கிகள் உங்களுக்கு சொல்லவேண்டும்.

இச்சேவையைப் பெறும் முன், பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்கள், மாதம்/ஆண்டு சந்தா விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

மொபைல் போன் கொண்டு நடைபெறும் பணபரிமாற்றங்கள் அனைத்துமே வங்கி அலுவலர் மூலமாகவே நிகழ்கிறது என்பதை உணருங்கள்.

மொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றபின் உங்கள் மொபைல்போனை நண்பரிடமோ அல்லது பிறரிடமோ கொடுக்காதீர்.

உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் வங்கிக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள்.

 Rajaghiri Gazzali
 
Thanks:- TMB

தெரிந்து கொள்ளுவோம் ..

1 .காலை பொழுதை AM என்கிறோம் ...AM இன் விரிவாக்கம் ?... அதை போல் PM ......?

 2 BUCK என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன ?....

 3 .BHK ---என்று சொல்லுவதை கேள்வி பட்டு இருப்போம்?... அதன் விரிவாக்கம் ?....

 4 .இங்கிலிஷில் 'dous ' என முடியும் வார்த்தைகள் 4 மட்டும் தான் .அவை என்ன ?...

 5 'the quick brown fox jumps over the lazy  dog "---இந்த வரியின் இருக்கும் அழகு என்ன?

 6 abcdef என்ற இந்த எழுத்துகள் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை /......

 7 .சிலர் ஏழு (7 ) என்ற என்னை எழுதும் போது அதன் நடுவில் ஒரு சின்ன கோடு போடுவார் ...அதன் காரணம் ?......

 8 ஓசி(இலவசம் ) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி சொல்லுவோம் .அது எப்படி வந்தது /........

இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் மீண்டும் முகேஷ் அம்பானி தக்க வைத்துக் கொண்டுள்ளார்

புதுடில்லி : இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் என்ற பெருமையை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

உலகின் புகழ் பெற்ற, "போர்ப்ஸ்' பத்திரிகை, இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மூன்றாவது முறையாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய். இரண்டாவது இடத்தை இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய். மூன்றாவது இடத்தை விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு, 79 ஆயிரம் கோடி ரூபாய். கடந்தாண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி, இந்த முறை ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் எஸ்ஸார் நிறுவன சகோதரர்கள் சரி, ரவி ருயா ஆகியோரும், ஐந்தாவது இடத்தை சாவித்ரி ஜிண்டாலும் பிடித்துள்ளனர். பெண் தொழிலதிபர் என்ற முறையில் பெருமை பெற்றவராகிறார். இந்த பட்டியலில் கடந்தாண்டை விட, இந்தாண்டில் 17 பேரின் பெயர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. மேலும், இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களின் ஆஸ்தி மொத்த அளவும் அதிகரித்திருக்கிறது.

Thirumavalavan in all praise for Aval Peyar Tamilarasi

Thirumavalavan in all praise for Aval Peyar Tamilarasi

Director Meera Kathiravan's Aval Peyar Tamilarasi is getting appreciations from wide sections of people which include politicians as well. Viduthalai Siruthai party president Thol Thirumavalavan showed interest to watch the movie and a special screening was arranged in a preview theatre last evening. 

 

On seeing the film Thirumavalavan was all praises. He congratulated the team for their effort for setting the film in the milieu of a vanishing folk art. He said that the movie should be watched by all Tamil speaking people.