துரோகி மனிதன் என்று அறியவில்லை..!!!

பசிக்குத்தான் சாப்பிட வந்தேன் திருடி வசதியாக வாழ வரவில்லை கனவுவிலும் நினைக்கவில்லை அன்னதானம் செய்து புண்ணியம் தேட நினைக்கும் மனிதன் இப்படி கொல்லுவான் என்று...!!!



எதிரி பூனையை அறிவேன்...
துரோகி மனிதன் என்று அறியவில்லை..!!!


ஊராட்சியில் உள்ள மொத்த வங்கி கணக்குகளின் விபரம்.


1. கிராம ஊராட்சி நிதி கணக்கு

2. தமிழ்நாடு மின்சார வாரியம்/தமிழ்நாடு வடிகால் வாரியம்/மாவட்ட ஆட்சியர் கொடுப்பு கணக்கு

3. கிராம ஊராட்சி மத்திய திட்ட நிதி கணக்கு

4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி கணக்கு

5. மாநில நிதி கணக்கு

6. முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்ட கணக்கு

7. கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதிய கணக்கு

8. கிராம ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட கணக்கு

9. கிராம ஊராட்சி மத்திய நிதி குழு மானியத் திட்டம் கணக்கு...

நன்றி radha.

WhatsApp வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில் சேமிக்கப்படமாட்டாது

🎤 *அட்மின்கள் அறிவிப்பு பயனுள்ள தகவல்*

*இனி யாரும் குரூப்பிலிருந்து  வெளியேற வேண்டாம் நன்றி*
வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் கலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம், இதனால் இவற்றை அடிக்கடி அழிக்க வேண்டியுள்ளது.

கவலையை விடுங்கள்.
😊😊

இதைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மாத்திரம் ஒரு  அம்சம்  உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் *குரூப்பில் மட்டுமே* பார்க்கலாம்.

 *செயற்படுத்தும் படிமுறை.*

◆ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.

◆ பின்பு *GROUP INFO* வை அழுத்தவும்.

◆ அப்போது மூன்று தெரிவுகளைக் காண்பீர்கள்.

01. *Mute Notification*
02. *Custom*
03. *Media Visibility*

இதில் *Media Visibility* ஐ அழுத்தவும்,

அதில்
 *Default*
 *Yes*
 *No*
என்று காணப்படும், அதில் *No* வை அழுத்தி பின்னர் *Ok* பண்ணவும்.

இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில்  சேமிக்கப்படமாட்டாது மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும்.

 *நன்றி* WhatsApp 

நுட்பவியல் கலைச் சொற்கள்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

⭕ WhatsApp      -       புலனம்
⭕ youtube          -       வலையொளி
⭕ Instagram       -       படவரி
⭕ WeChat          -        அளாவி
⭕ Messanger     -        பற்றியம்
⭕Twtter              -         கீச்சகம்
⭕ Telegram        -         தொலைவரி
⭕ skype             -          காயலை
⭕Bluetooth       -          ஊடலை
⭕ WiFi             -          அருகலை 
⭕ Hotspot        -          பகிரலை
⭕ Broadband  -        ஆலலை
⭕ Online           -         இயங்கலை
⭕ Offline            -        முடக்கலை
⭕ Thumbdrive   -        விரலி
⭕ Hard disk       -        வன்தட்டு
⭕ GPS                -        தடங்காட்டி
⭕ cctv                 -        மறைகாணி
⭕ OCR              -         எழுத்துணரி
⭕ LED              -         ஒளிர்விமுனை 
⭕ 3D                  -        முத்திரட்சி
⭕ 2D                 -         இருதிரட்சி
⭕ Projector       -        ஒளிவீச்சி
⭕ printer          -        அச்சுப்பொறி
⭕ scanner         -        வருடி
⭕ smart phone  -       திறன்பேசி
⭕ Simcard          -       செறிவட்டை
⭕ Charger          -        மின்னூக்கி
⭕ Digital             -         எண்மின்
⭕ Cyber            -          மின்வெளி
⭕ Router           -         திசைவி
⭕ Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு
⭕ Thumbnail              சிறுபடம்
⭕ Meme           -         போன்மி
⭕ Print Screen -          திரைப் பிடிப்பு
⭕ Inkjet             -           மைவீச்சு
⭕ Laser            -          சீரொளி
நல்ல முயற்சி நாமும்  மனனம் செய்வோம் .

- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்கும்
பகிரலாம் -
வாழ்க வளமுடன்...

நன்றி எழதியவருக்கு. 

கொரோனா செயற்கை என்கிறார்கள், இயற்கை என்கிறார்கள், சீனாவின் சதி என்கிறார்கள்?!

#வேலை_இழந்தோர்_பலர்...*

#நிம்மதி_இழந்தோர்_பலர்...*

*வாழ்வாதாரத்தை இழந்து வீட்டு வாடகை கொடுக்க இயலாதவர்கள் பலர்...*

*பசி, பட்டினியால் உயிர் இழந்தவர்கள் பலர்...*

*தன்னுடைய தாய், தகப்பன் இறப்பிற்கு கூட செல்ல இயலாத வெளிநாட்டு வாழ்க்கை...*

*"அன்றாடம் கூலி வேலை செய்தால்தான் சாப்பிட முடியும்" என்ற நிலையில் உள்ளவர்களில் கதியோ...*

*அவர்களின் சோகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது...*

*மனைவி மக்களை பிரிந்து வாடும் ஆண்மகனின் வளைகுடா வாழ்க்கையோ!? செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறான்...*

*செயற்கை என்கிறார்கள், இயற்கை என்கிறார்கள், சீனாவின் சதி என்கிறார்கள், அதில் உள்ள மர்மங்கள் என்ன? அவிழ்க்கப்படாத ரகசியங்கள் என்ன?*

*சேமிப்பும் இல்லை, வேலையும் இல்லை, ஊரடங்கினால் ஊனமானவர்கள் ஏராளம் ஏராளம்...*

*விண்ணை முட்டிய வளர்ச்சி என்றார்கள், வல்லரசுகளின் ராஜ்யம் என்றார்கள், உன் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியாமல் உன்னை தடுத்தது எது?*

*உன் ஆணவமும், அகந்தையும், பகட்டும், வெற்று பெருமையும் சுக்கு நூறாக்கப்பட்டதன் காரணம் என்ன?*

*மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களினால் வீழ்ந்தது மனித நேயம் மட்டுமல்ல...சகோதரத்துவம், சமத்துவமும் தான்...*

*யாரை நம்புவது? புகழிடம் தேடி எங்கே அலைவது? சரியான பாதையை, தீர்வை தருவது யார்?*

*நோய்க்கான நிவாரணம் இல்லாமல் நோயை இறக்குவது இல்லை என்பதன் உண்மை நிலை என்ன?*

அனைத்திற்கும் ஒரே பதில் நம்மை படைத்த நாயனிடம் சரணாகதி அடைவோம்!

*கைகளை உயர்த்தி கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டான் என்பதில் ஆழமான நம்பிக்கை வைப்போம்*

*நம்முடைய ஆடை, உணவுகள், வருமானம் அனைத்தும் யாரையும் ஏமாற்றாமல், யாரையும் வஞ்சிக்காமல் இறை பொருத்தத்தோடு வருகிறதா? என்பதை சுய பரிசோதனை செய்வோம்!*

*"திரை மறைவில் உள்ள உன் சகோதரனுக்காக நீ பிராத்தித்தால் உனக்கும் அதுபோல் கிடைக்கும்" என்பதில் அதிகமதிகம் ஆர்வம் கொள்வோம்*

இறுதியாக நாம் பலகீனமானவர்கள், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விளங்கி முக்காலத்தை அறிந்த ஏக இறைவனிடம் இருகரமேந்தி அசைக்க முடியாத உறுதியுடன் நம்முடைய பிரார்த்தனைகளை வைப்போம்...

*பிரார்த்தனையின் வலிமை லேசானது அல்ல...*

நம்முடைய நேரங்களை ஒதுக்கி நம்முடைய கோரிக்கைகளை வைப்போம்

*"கலப்பற்ற முறையில் பாவமன்னிப்பு கேளுங்கள் - அல்குர்ஆன்*

வேளாண்மை செய்திகள் - பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள்.


1. அகச்சுரப்பியியல் – Endocrinology
2. அடிசிலியல் – Aristology
3. அடையாளவியல் – Symbology
4. அண்டவியல் – Universology
5. அண்டவியல் – Cosmology
6. அணலியல் – Pogonology
7. அருங்காட்சியியல் – Museology
8. அருளரியல் – Hagiology
9. அளவீட்டியல் – Metrology
10. அற்புதவியல் – Aretalogy
11. ஆடவர் நோயியல் – Andrology
12. ஆய்வு வினையியல் – Sakanology
13. ஆவணவியல் – Anagraphy
14. ஆவியியல் – Spectrology
15. ஆறுகளியல் – Potamology
16. இசையியல் – Musicology
17. இந்தியவியல் – Indology
18. இயற்பியல் – Physics
19. இரைப்பையியல் – Gastrology
20. இலக்கிலி இயல் – Dysteleology
21. இறை எதிர் இயல் – Atheology
22. இறைமையியல் – Pistology
23. இறைமையியல் – Theology
24. இன உறுப்பியல் – Aedoeology
25. இன்ப துன்பவியல் – Algedonics
26. இனப் பண்பாட்டியல் – Ethnology
27. இனவியல் – Raciology
28. ஈரிடவாழ்வி இயல் – Herpetology
29. உடலியல் – Physiology
30. உடற் பண்டுவஇயல் – Phytogeography
31. உடற்பண்பியல் – Somatology
32. உடுவியக்கவியல் – Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் – electro biology
35. உயிர்ப்படிமவியல் – Paleontology
36. உயிர்ப்பொருளியல் – Physiology
37. உயிர்மியியல் – Cytology
38. உயிரித் தொகை மரபியல் – Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் –
...................... .......................... Population Dynamics
40. உயிரிய இயற்பியல் – Biophysics

41. உயிரிய மின்னணுவியல் – Bioelectronics
42. உயிரிய வேதியியல் – Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் – ..........................................Biochemical taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology
45. உயிரியப் பொறியியல் – Bioengineering
46. உயிரியல் – Biology
47. உயிரினக் காலவியல் – Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் – Bioecology
49. உருவகவியல் – Tropology
50. உருள்புழுவியல் – Nematology
51. உரைவிளக்கியல் – Dittology
52. உளவியல் – Psychology
53. ஊட்டவியல் – Trophology
54. எகிப்தியல் – Egyptology
55. எண்கணியியல் – Numerology
56. எரிமலையியல் – Volconology
57. எலும்பியல் – Osteology
58. எலும்பு நோய் இயல் – Osteo pathology
59. எறும்பியல் – Myrmecology
60. ஒட்பவியல் – Pantology
61. ஒப்பனையியல் – Cosmetology
62. ஒலியியல் – Phonology
63. ஒவ்வாமை இயல் – Allergology
64. ஒழுக்கவியல் – Ethics
65. ஒளி அளவை இயல் – Photometry
66. ஒளி இயல் – Photology
67. ஒளி உயிரியல் – Photobiology
68. ஒளி விளைவியல் – Actinology
69. ஒளி வேதியியல் – Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் – Photozincography
71. ஓசையியல் – Acoustics
72. கசிவியல் – Eccrinology
73. கட்டடச்சூழலியல் – Arcology
74. கடப்பாட்டியல் – Deontology
75. கடல் உயிரியல் – Marine biology
76. கடற் பாசியியல் – Algology
77. கண்ணியல் – Opthalmology
78. கணிப்பியல் – Astrology
79. கதிர் மண்டிலவியல் – Astrogeology
80. கதிர் விளைவியல் – Actinobiology

81. கரிசியல் – Hamartiology
82. கரிம வேதியியல் – Organic Chemistry
83. கருத்தியல் – Ideology
84. கருதுகை விலங்கியல் – Cryptozoology
85. கருவியல் – Embryology
86. கருவியல் – Embryology
87. கல்வி உளவியல் – Educational Psychology
88. கலைச்சொல்லியல் – Terminology
89. கழிவியல் – Garbology
90. கனி வளர்ப்பியல் – Pomology
91. கனிம வேதியியல் – inorganic chemistry
92. கனியியல் – Carpology
93. கனியியல் – Pomology
94. காளானியல் – Mycology
95. காற்றழுத்தவியல் – Aerostatics
96. காற்றியக்கவியல் – Aerodynamics
97. காற்றியல் – Anemology
98. கிறித்துவியல் – Christology
99. குடல் புழுவியல் – Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் – Haematology / Hematology
102. குளுமையியல் – Cryology
103. குற்றவியல் – Criminology
104. குறிசொல்லியல் – Parapsychology
105. குறிப்பியல் – Cryptology
106. குறியீட்டியல் – Iconology
107. கெல்டிக் சடங்கியல் – Druidology
108. கேட்பியல் – Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் /
 .................... சைகையியல்) -Pasimology
110. கையெழுத்தியல் – Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் – Archology
113. கோளியல் – Uranology
114. சங்குஇயல் – Conchology
115. சமயவிழாவியல் – Heortology
116. சரி தவறு ஆய்வியல் – Alethiology
117. சாணவியல் – Scatology
118. சிலந்தி இயல் – Araneology
119. சிலந்தியியல் – Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology

121. சீனவியல் – Sinology
122. சுரப்பியியல் – Adenology
123. சூழ் வளர் பூவியல் – Anthoecology
124. சூழ்நிலையியல் – Ecology
125. செதுக்கியல் – Anaglyptics
126. செய்கை இயல் – Dactylology
127. செல்வ வியல் – Aphnology
128. செல்வவியல் – Plutology
129. செவ்வாயியல் – Areology
130. செவியியல் – Otology
131. சொல்லியல் – Lexicology
132. சொல்லியல் – Accidence
133. சொற்பொருளியல் – Semasiology
134. தசையியல் – Myology
135. தண்டனையியல் – Penology
136. தமிழியல் – Tamilology
137. தன்மையியல் – Axiology
138. தன்னியல் – Autology
139. தாவர உள்ளியல் – Phytotomy
140. தாவர நோய் இயல் – Phytopathology
141. தாவர வரைவியல் – Phytography
142. தாவரஊட்டவியல் – Agrobiology
143. தாவரவியல் – Botany
144. திணைத் தாவர இயல் – Floristics
145. திணையியல் – Geomorphology
146. திமிங்கில இயல் – Cetology
147. திருமறைக் குறியீட்டியல் – Typology
148. திருமனையியல் – Naology
149. திரைப்படவியல் – Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் – Particle physics
152. துகளியல் – Koniology
153. துதிப்பாவியல் – Hymnology
154. துயிலியல் – Hypnology
155. தூய இலக்கியல் – Heirology
156. தூள்மாழை இயல் – Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் – Angelology
159. தேவாலயவியல் – Ecclesiology
160. தேனீ இயல் – Apiology

161. தொடர்பிலியியல் – Phenomenology
162. தொண்டை இயல் – Pharyngology
163. தொல் அசீரியர் இயல் – Assyriology
164. தொல் உயிரியல் – Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் – Paleo ecology
166. தொல் பயிரியல் – Paleobotany
167. தொல் மாந்தவியல் – Paleoethnology
168. தொல் மீனியல் – Paleoichthylogy
169. தொல் விலங்கியல் – Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த –
மாந்தக்குரங்கினவியல்) – Anthropobiology
171. தொல்லிசையியல் – Ethnomusicology
172. தொல்லியல் – Archaeology
173. தொல்லினவியல் – Paleethnology
174. தொல்லெச்சவியல் – Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology
176. தொழில் நுட்பவியல் – Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் – industrial chemistry
178. தொழு நோயியல் – Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology
180. தொன்மவியல் – Mythology
181. தோட்டுயிரியியல் – Astacology
182. தோல்நோயியல் – Dermatology
183. நச்சியியல் – Virology
184. நடத்தையியல் – Praxeology
185. நரம்பியல் – Neurology
186. நல்லுயிரியல் – Pneumatology
187. நலிவியல் – Astheniology
188. நன்னியல் – Agathology
189. நாடி இயல் – Arteriology
190. நாணயவியல் – Numismatology
191. நாளவியல் – Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் – Hydrogeology
194. நிலநடுக்கவியல் – Seismology
195. நிலாவியல் – Selenology
196. நிலை நீரியல் – Hydrostatics
197. நீத்தாரியல் – Martyrology
198. நீர் வளர்ப்பியல் – Hydroponics
199. நீர்நிலைகளியல் – Limnology
200. நீராடல் இயல் – Balneology

201. நுண் உயிரியல் – Microbiology
202. நுண் வேதியியல் – Microchemistry
203. நுண்பொருளியல் – Micrology
204. நுண்மி இயல் – Bacteriology
205. நுண்மின் அணுவியல் – Micro-electronics
206. நூல் வகை இயல் – Bibliology
207. நெஞ்சக வியல் – Cardiology
208. நெடுங்கணக்கியல் – Alphabetology
209. நெறிமுறையியல் – Aretaics
210. நொதி இயல் – Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology
212. நோய் இயல் – Pathology
213. நோய்க்காரணவியல் – Aetiology
214. நோய்க்குறியியல் – Symptomatology
215. நோய்த்தடுப்பியல் – Immunology
216. நோய்த்தீர்வியல் – acology
217. நோய்நீக்கியல் – Aceology
218. நோய்வகையியல் – Nosology
219. நோயாய்வியல் – Etiology
220. நோயியல் – Pathology
221. படஎழுத்தியல் – Hieroglyphology
222. படிகவியல் – crystallography
223. பணிச்சூழ் இயல் – Ergonomics
224. பத்தியவியல் – Sitology
225. பயிர் மண்ணியல் – Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் – Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் – kinematics
229. பருவ இயல் – Phenology
230. பருவப் பெயர்வியல் – Phenology
231. பல்லியல் – Odontology
232. பழங்குடி வழக்கியல் – Agriology
233. பழம்பொருளியல் – Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் – Contrology
235. பறவை நோக்கியல் – Ornithoscopy
236. பறவையியல் – Paleornithology
237. பனிப்பாளவியல் – Glaciology
238. பாசி இயல் – Phycology
239. பாப்பிரசு சுவடியியல் – Panyrology
240. பாம்பியல் – Ophiology

241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் – Mammalogy
243. பாறைக் காந்தவியல் – Palaeo Magnetism
244. பாறையியல் – Lithology
245. பாறை அமைவியல் – Petrology
246. பிசாசியல் – Diabology
247. பிளவையியல் – Oncology
248. புத்த இயல் – Buddhology
249. புத்தியற்பியல் – New physics
250. புதிரியல் – Enigmatology
251. புதைபடிவ இயல் – Ichnology
252. புல உளவியல் – Faculty Psychology
253. புல்லியல் – Agrostology
254. புவி இயற்பியல் – Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் – Biogeography
256. புவி வடிவ இயல் – Geodesy
257. புவி வளர் இயல் – Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் – Geography
260. புவிவெளியியல் – Meteorology
261. புள்ளியல் – Ornithology
262. புறமண்டிலவியல் – Exobiology
263. புற்று நோய் இயல் – Cancerology
264. பூச்சி பொட்டு இயல் – Acarology
265. பூச்சியியல் – Entomology
266. பூச்சியியல் – Entomology
267. பூச்சியியல் – Insectology
268. பெயர்வன இயல் – Acridology
269. பெரு வாழ்வியல் – macrobiotics
270. பேயியல் – Demonology
271. பொதுஅறிவு இயல் – Epistemology
272. பொருள்சார் வேதியியல் – Physical Chemistry
273. போட்டியியல் – Agonistics
274. போதனையியல் – Patrology
275. மகளிர் நோய் இயல் – Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் – Craniology
277. மண்ணியல் – Pedology
278. மண்புழையியல் – Aerology
279. மணி இயல் – Campanology
280. மணிவியல் – Gemolog

281. மதுவியல் – Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் – Photoxylography
283. மரபு இயைபியல் – Genecology
284. மரபு வழியியல் – Geneology
285. மரவரியியல் – Dendrochronology
286. மரவியல் – Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் – Posology
288. மருத்துவ நோயியல் – Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் – Clinical genetics
290. மருந்தாளுமியல் – Pharmacy
291. மருந்தியல் – Pharmacology
292. மருந்து வேதியியல் – Medicinal chemistry
293. மலையியல் – Orology
294. மழையியல் – Ombrology
295. மனக்காட்சியியல் – Noology
296. மனநடையியல் – Nomology
297. மன்பதை உளவியல் – Social Psychology
298. மன்பதையியல் – Sociology
299. மனைவளர்உயிரியல் – Thremmatology
300. மாந்த இனவியல் – Ethnology
301. மாவியல் – Morphology
302. மானிடவியல் – Anthropology
303. மின் ஒலியியல் – Electro-acoustics
304. மின்வேதியியல் – Electrochemistry
305. மின்னணுவியல் – Electronics
306. மீனியல் – Ichthyology.
307. முகிலியல் – Nephology
308. முட்டையியல் – Oology
309. முடியியல் – Trichology
310. முதற்கோட்பாட்டியல் – Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் – Andragogy
312. முதுமையியல் – Gerontology
313. முரண் உயிரியல் – Teratology
314. முரணியல் – Heresiology
315. முறையியல் – Systomatology
316. முனைப்படு வரைவியல் – Polarography
317. மூக்கியல் – Rhinology
318. மூதுரையியல் – Gnomology
319. மூப்பியல் – Gerontology
320. மூலக் கூறு உயிரியல் – Molecular biology

321. மெய் அறிவியல் – Philosophy
322. மெய்ம்மி நோயியல் – Histopathology
323. மெய்ம்மியியல் – Histology
324. மேகநோயியல் – Syphilology
325. மொழியியல் – Philology
326. மோப்பவியல் – Olfactology
327. ரூனிக்கியல் – Runology
328. வகையியல் – Taxology
329. வண்ணவியல் – Chromatology
330. வழக்குப் பேச்சியல் – Dialectology
331. வழிபாட்டியல் – Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் – Aerobiology
334. வாந்தியியல் – Emetology
335. வாய்நோயியல் – Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் – Astrophysics
338. வானஞ்சலியல்
...............(வானஞ்சல்தலையியல்) –Aerophilately
339. வானியல் – Astronomy
340. வானிலை இயல் – Neteorology/Astrometeorology
341. வானோடவியல் – Aerodonetics
342. விசை இயக்க இயல் – Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் – Astrobiology
345. விண்பொருளியல் – Astrogeology
346. விந்தையியல் – Thaumatology
347. விலங்கியல் – Zoology
348. விளைச்சலியல்
........................(வேளாண் பொருளியல்) –Agronomics
349. வெளிற்றியல் – Agnoiology
350. வேதியியல் – Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் – Etymology

நன்றி: வேளாண்மை செய்திகள் R.அன்பரசு.

பெற்றோர்களே தயவு கூர்ந்து பிள்ளைகளுக்கு பாடப்புத்தகங்களை நடத்தாதீர்.....

# உங்களது  குழந்தை பருவத்தின் இனிமையான நிகழ்வுகளை பிள்ளைகளுக்கு கதை சொல்வதுபோல சொல்லிக்கொடுங்கள்.
👉 நாமும் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை அது தூண்டிவிடும். 

# உங்களது தாய் தந்தையரின் உயர்வான குணங்களை உங்களை வளர்த்தெடுக்க படிக்கவைக்க திருமணம் செய்துகொடுக்க அவர்கள் பட்ட துன்பங்களை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லிக் கொடுங்கள்.
👉 குடும்பத்தின் மூத்தவர்கள் மீது இனம்புரியாத ஈர்ப்பும் மரியாதையும் உண்டாகும்.

# உங்களைச் சுற்றி நடக்கும் சமூக அரசியல் நடப்புகளை கூட்டல் குறைத்தல் இல்லாமல் சொல்லிக்கொடுங்கள்.
👉 நாளை சமூக களத்தில் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளை சந்திப்பதற்கு அவர்களை தயார்படுத்தும்.

# மோசமான தோல்விள் எதார்த்தம் என்றும் அவற்றை சந்தித்து தான் ஆக வேண்டும்  என்றும் கற்றுக்கொடுங்கள்.
👉 உங்கள் பிள்ளைகளை வெற்றியாளர்களாக நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். 

# பசி வறுமை ஏழ்மை இவற்றை அனுபவங்களோடு கண்ணீர் மல்க கற்றுக்கொடுங்கள்.
👉 அதில்தான் பிள்ளைகள் மனிதத்தன்மை பெறுவதற்கான அபூர்வ சூட்சுமம் அடங்கியுள்ளன.

# தர்மம் செய் என்று சொல்லாதீர். மாறாக கைபிடித்து உங்களோடு செய்ய வையுங்கள்.
👉 தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்  என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து வரும் உண்மை என்பதை மறவாதீர்.

உலகின் எந்த கல்விமுறையிலும் எந்த பாடப்புத்தகங்களிலும் இதை பார்க்க முடியாது. ஆனால் இது தான் உங்கள் பிள்ளைகளுக்கு இப்போதும் எப்போதும் தேவையான பாடமும் பயிற்சியும் படிப்பினைகளும் என்பதை மனதார நம்புங்கள்.

பொன்போல வாய்த்த இந்த ஓய்வு காலத்திலாவது பாடப்புத்தகங்களை சற்று ஒதுக்கி வையுங்கள்.

கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

கொய்யாப்பழத்தைக் கடித்துச் சாப்பிடுங்கள். பற்களும் ஈறுகளும் பலம் பெறும். கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.


மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம்.

சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாபழத்தினைத் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம்
சாப்பிடலாம்.

விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே அழித்துவிடும்.

கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புக்கள் உள்ளன.
கொய்யாப்பழத்தில் நிறைய வைட்டமின் C உள்ளது.கொய்யாப்பழம் வளரும் சிறுவர்களுக்கு எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும்
அளிக்கின்றது.
(சித்தா மருத்துவக் குறிப்புக்கள்)

நன்றி அப்துல் முத்தலீப் 

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம்...

பழரசத்தை விடவெயிலுகந்தது பானகம் தான் ... கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்

வெயிலுக்கு பானகம் அருந்தும் போது instant energy கிடைக்கிறது நடைப்பயணம் போகும் போது கழைப்பாக வீடு வந்தடையும்,போது நாம் அருந்தும்

பானகமானது உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும்,

இரும்புச்சத்தை அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,

ஏலக்காயிலிருந்து உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகளையும் செரிமானத்தை சரி செய்வதும்,

எலுமிச்சம்பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைதன்மையை உருவாக்குவதும் அதை பற்றி தரவுகள் அனைவருக்கும் தெரிந்ததே,

புளியிலிருக்கும் விட்டமின் C யானது பனைவெல்லத்துடன் வினை புரிந்து உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது அதுமட்டுமல்ல சுக்கு மிக சிறந்த வினையூக்கி உடலுக்கு என்பதை நாமெல்லாம் அறிந்த செய்தி......

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம் அதன் மூலம் வெப்பத்தால் உருவாகும் நோய் தொற்றுக்களை தவிர்ப்போம்...

இதன் மூலம் உடலுக்கு நோய்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களை தவிர்க்கவே முயல்வோம் .

நன்றி Dr. Thenmozhi Rajendhiran  ... 

மனிதம் பரப்புவோம் - கொரோனா ஒழிப்போம்!

நாமெல்லாம் மருத்துவர்களுக்காகக் கைதட்டினோம்...
மருத்துவர்கள் யாருக்காகக் கைதட்டினார்கள் தெரியுமா?
மனிதம்  - பரவட்டும் திக்கெட்டும்! ❤️

'வைரஸ்’ திரைப்படத்திலொரு காட்சி வரும். (நிப்பா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிந்திராத) ஒருவர் கடுமையான இருமலுடன், மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரிடம் செல்வார்.

அந்த ஓட்டுநர் அவரை அண்ட விடாமல் விரட்டுவார்.  அந்த வழியே   ‘பைக்’ இல் வரும் நபரிடம் அவர் ‘லிஃப்ட்’ கேட்கபதற்காக இடைமறிக்க, உடனே ஆட்டோ ஓட்டுநர், “இவருக்கு நிப்பா வைரஸ் இருக்கு போய்விடு...” என்று சொல்ல, ‘பைக்’இல் வந்தவர் பேயைக் கண்டு அரண்டதுபோல ஓடுவார்...
பிறகு அந்த நோயாளி கட்டையால் தாக்கப்படுவது போல் காட்சி முடியும்.

கொரோனாவைரஸ் தொற்று என மதுரையில் ஒரு இளைஞரை ஒரு சிறு லாரியில் எப்படி ஏற்றினார்கள், எப்படி அவரைக் கையாண்டார்கள்; இறுதியில்  நோய்த்தொற்றே இல்லாதிருந்தும் சமூகம் தந்த அழுத்தத்தால், அவர் எப்படி தம் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது பற்றிய செய்தியும் அறிந்திருப்போம்.

அடுத்ததாக, மருத்துவப் பணியாளர்களைப் போற்றும் விதமாகக் கைதட்டியும், விளக்கொளியேற்றியும் நன்றி தெரிவித்து செல்ஃபிகளைப் பகிர்ந்தோம், ஆனால்,

அதே மருத்துவர்களில் சிலர் கொரோனாவைரஸ் தெற்றேற்பட்டு மரணமடைந்துவிட்ட நிலையில், அவர் உடலைப் புதைக்க இடம்தர மறுத்து நடந்த பெரும் சோக நிகழ்வுகளையும் அறிந்திருந்தோம்.

இரண்டு நாள்களுக்கு முன் ஸ்பெயினில் என்ன நடந்தது தெரியுமா? நாம் அறிந்திருக்கமாட்டோம்.

உலகில் கொரோனாவைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஸ்பெயினும் ஒன்று. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 இருபதாயிரத்திற்கும் அதிகம் இறந்திருக்கிறார்கள். இந்நிலையில், நோய்த் தொற்று ஏற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு இலவசமாகத் தமது டாக்ஸியில் கொண்டுபோய் விடுவதை ஒரு டாக்ஸி டிரைவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

 அவர் கொரோனாவைரஸ் நோயாளிகளிடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதை ஒரு சேவையாகவே செய்து வந்திருக்கிறார்.

இதையறிந்த மருத்துவர்கள் இரண்டு நாள்களுக்கு முன் அந்த ஓட்டுநரைத் தொலைபேசியில் அழைத்து மருத்துவமனையிலிருந்து ஒரு நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும். வரமுடியுமா?” என்று கேட்க, உடனே வருகிறேன் என்று மருத்துவமனைக்கு விரைந்து வரவேற்பரையை அடைந்தவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி....

ஆம், நீங்கள் வீடியோவில பார்ப்பதுபோல, அவர் உள்ளே நுழைந்ததும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்திருக்கிறார்கள். ஒன்றும் புரியாமல் விழித்த ஓட்டுநருக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது மருத்துவக்குழு.....  பெரிய தொகைக்கான ‘செக்’ ஒன்றினை அளித்திருக்கிறார்கள். மகிழ்வுற்ற ஓட்டுநர் நன்றி தெரிவித்து நெகிழ்கிறார்.

டாக்ஸி ஓட்டுநர் சங்கம் இவரால் பெருமிதம் கொண்டு, “இது சோதனைக்காலம் இல்லை; மனிதர்கள் மனிதம் பரப்ப உகந்த காலமிது!” என்றிருக்கிறது!!

பதிவர்- Rafeeq Sulaiman

எழுதி வையுங்கள்..கொரோனாவை *இல்லையெனில்* வருங்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்.! தனிமை நாட்கள்!!

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

காய்கறிச்சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!

நடமாடும் மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*

கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தலங்கள்.!*

காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*

தீண்டாமை ஒரு
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*

இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*

சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*

காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*

சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*

சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*

பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட
*இன்றைய தலைமுறையினர்.!*

தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*

சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*

பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!

இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*


நன்றி Ashok 

மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.



மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா..என்று கேட்டார் அண்ணா.  கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா.

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.

நன்றி Eswari Press
# விஜயன் சி

மாதுளம்பழத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன.


இனிப்பு மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கும்.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

மாதுளம் பழ ஜூஸ் தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் நினைவாற்றல் பெருகும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினை
குணமாகும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவிற்குப் பின் ஒரு மாதம் தினமும் சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

(சித்த மருத்துவக் குறிப்புகள்)
நன்றி Muthalib

அருமையான கிராமியப் பாடல்...

மச்சானைப் பார்த்தீங்களா!


கருக்கலிலே கலப்பையுடன்
கழனிக்குப்போன மச்சான்
வருத்தும் வெய்யில் வந்தபின்னும்
வரக்காணோம் கூழ் குடிக்க!
கம்பங் கூழ் காச்சி வச்சேன்
கண்மாய் மீன் குழம்பு வச்சேன்!
தும்பைப்பூ போலச் சோறு
சுடச்சுடவே ஆக்கி வச்சேன்!
விரா மீனு ஆனங்காச்சி
விருந்தாக்கி வச்சிருக்கேன்!
வரலியே மச்சானும்
வயித்தெவேறே பசிக்கிதிங்கே!
குடிச்சிப்புட்டு மரநிழலில்
கூட்டாளி சனங்களோடு
பிடிச்சபாட்டைப் பாடினாரோ
பின்னே என்ன செஞ்சாரோ!

வயசுப்பொண்ணு வீட்டினிலே
வாக்கப்பட்டு வந்திருக்கேன்
பய மனசு மாறிடுச்சா
பாத்துக்கிறேன் வரட்டுமிங்கே!

நன்றி muthalif

மீன்பிரியரான நான் அதோடு சேர்ந்து மிதந்து விட்டேன்!!

ஆகச்சிறந்த மீன் குழம்பு என்பது யாதெனில்.....



நல்ல ஒரு கிலோவிற்க்கு குறையாமல் ஒரே மீனாக உயிரோடிருக்கும் விரா  மீனா பார்த்து வாங்கி, அதை குழம்புக்கு தனியா வறுவலுக்கு தனியா வெட்டி, மீன் குழம்புக்கு தேவையான சகல மசாலாக்களை சேர்த்து குறிப்பாக சின்ன வெங்காயம், பச்சமிளகா, வெந்தயம் சேர்த்து நல்லா கொதித்த பின்பு விரா மீன் மண்டையையும் வாலையையும் போட்டு, இறக்கும்போது ஒட்டு மாங்கையை குறுக்கு வெட்டாய் வெட்டி போட்டு இறக்கி, குறுத்து வாழை இலையாய் பார்த்து, அதில் முனை இலையை வெட்டி தண்ணி தெளித்து, வறுத்தமுனுக்கு இரண்டு வச்சு, பொன்னி அரிசியை பதமாய் வடித்து நடுயிலையில் போட்டு, இறக்கி வைத்த மீன் குழம்பை ஊத்தி, குழம்பு மீன்ல கொஞ்சம் வறுத்த மீன்ல கொஞ்சம் சோத்தோட சேர்த்து நாக்குல வச்சா காரமும் புளிப்பும் அப்படியே உச்சந்தலைக்கு ஏறனும். உள்நாக்க தொட்டு தொண்டையில இறங்குனா அமிர்தம் தேவாமிர்தம்......

நன்றி தேவி.

ஷிபா மருத்துவமனைக்கு மேலப்பாளையம் ஊர் மக்கள் நன்றியோடு, பாராட்டு.

கொரோணா ஊரடங்கு நாட்களில்
வழக்கம் போல நோயாளிகளுக்கும்,  கிட்னி டயாலிசிஸ் செய்ய வேண்டியவர்களுக்கும், இதயநோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்முகத்துடன், மருத்துவப்பணிகள் மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர்காத்த

#திருநெல்வேலி_ஷிபா_மருத்துவமனைக்கும் அதன் மேலாண்மை இயக்குனர் #MKM_முகம்மது_ஷாபி,அவரது மகன் #டாக்டர்_அரபாத்MD மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் உள்ளிட்டவர்களை மேலப்பாளையம் ஊர் மக்கள் நன்றியோடு, பாராட்டு.

கொரோனா... ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

*இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி...!!!*

ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

கடைகள் திறந்தாலும் சரி...

 திறக்கப்படவிட்டாலும் சரி.....

ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...

 தளராவிட்டாலும் சரி.....

ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி....

 தடுக்காவிட்டாலும் சரி...

அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி....

 போடாவிட்டாலும் சரி...

மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி....

 பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்.

அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...

லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்....

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்....

அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்......

கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.....

எச்சில் துப்பாதீர்கள்.....

கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....

கும்பல் கூடுவதை தவிருங்கள்.......

முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

 அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க.... மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லமால் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

*அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்...!!!*
தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்...


தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி...!!!

படித்ததில் பிடித்தது.

*தமிழ் நாட்டின் சமய வரலாறு.*

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

1.சைவம்
2.சாக்தம்
3.வைஷ்ணவம்
4.கணாபத்யம்
5.கெளமாரம் 
6.செளரம்         
7.ஸ்மார்த்தம் 

_சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்....,_
*276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*

_வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்......,_
*96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*

_கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்...._
*18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்*

_கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும்_ *தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!*

_செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது_ *தமிழ்நாட்டில் தான்...!!*

_சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்...._
*பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்...!!*

மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும்....
*ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்*

_பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,_
*ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்...!!*

_ஆழ்வார்கள்....,  நாயன்மார்கள்.....,_
*தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்....!!*
_பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர், ஆகாயம், நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்*

_நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்*

_*12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது*
*தமிழ்நாட்டில் தான்.*

_சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்.*

இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்.....!!

_இந்து பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே_
*தமிழ்நாடு தான்...!!*

_இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது_
*தமிழ்நாட்டில் தான்....!!!*

தமிழ்நாடு முழுக்க முழுக்க  ஆன்மிகபூமி...!!!

"பகிருங்கள் அன்பர்களே"...!!
அனைவரும்

எந்த எதிர்பார்ப்புமே இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எளிமையாகிவிடுகிறது.

நன்றி jazeela

எங்கள் வீட்டுப் பணிகளில் உதவியாக இருப்பவர் மிக அழகாக இருப்பார். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு. அவர் வங்காள நாட்டைச் சேர்ந்தவர். இன்று அவரிடம், "உங்களுக்கு எந்த வயதில் திருமணம் முடிந்தது?" என்று பேச்சைத் தொடங்கினேன். தனக்குப் பதிமூன்று வயதிலேயே திருமணம் முடிந்ததாகவும் தங்கள் நாட்டில் இப்படித்தான் பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயதிலேயே திருமணம் முடிந்துவிடும் என்றும் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

அவருக்கு ஒரே ஒரு மகன் தான். "மகன் என்ன படிக்கிறார்?" என்று கேட்டேன். "அவன் பத்து வரை மட்டும் படித்துவிட்டு அதற்கு மேல் படிக்க முடியாது என்று சொல்லிவிட்டான். அதனால் அவனை துபாய்க்கு அழைத்துக் கொண்டோம். இல்லாவிட்டால் திருமண வலையில் விழுந்துவிடுவான்" என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தங்கள் நாட்டில் கொஞ்சம் வசதியான பையனைக் கண்டால் பெண் பிள்ளை வைத்திருக்கும் பெற்றோர் அந்தப் பையனைக் கவர்வார்களாம். திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லையென்றால் நஷ்டயீடாக ஏழு எட்டு லட்சம் வாங்கி விட்டுத்தான் விலகுவார்களாம். "உங்க மகனுக்குப் பதினாறு வயதுதானே இருக்கும்?" என்றேன். "ஆம். எங்க ஊரில் அப்படித்தான்" என்றார். "வங்காளத்தில் ஏதேனும் கிராமத்திலா?" என்றேன். "இல்லை டாக்கா நகரத்தில்தான் இப்படி" என்று ஆதங்கப்பட்டார்.

"சரி அவரைப் படிக்க வைத்தால் என்ன?" என்றேன்.

"அவன் படிக்க மறுக்கிறான் படிக்காமல் நானும் அவன் தந்தையும் (அவள் கணவர் ஏசி பழுது பார்ப்பவர்) சம்பாதிப்பதை உதாரணம் காட்டுகிறான்" என்றார். "ஆனால் இது கடினமான வேலை என்று எடுத்துச் சொல்ல கூடாதா?" என்றதற்கு, சிரித்துக் கொண்டே "அவன் தந்தையுடைய சகோதரர் சிவில் என்ஜினியர் எங்களுடன் தான் தங்கியிருக்கிறார். அவர் துபாய் வந்து ஒரு வருடமாகப் போகிறது இன்னும் எந்த வேலையும் கிடைக்கவில்லை, படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது கடினம்தானே?" என்றார். "உங்களிடம் என் மகனை அழைத்து வருகிறேன் நீங்கள் வேண்டுமென்றால் பேசிப் பாருங்கள், நாங்கள் தான் வீட்டு வேலை செய்து பிழைக்கிறோம், அவனாவது இப்படிக் கஷ்டப்படாமல் நல்ல வேலைக்குப் போகட்டுமே. ஆனால் என் மகன் சொல்கிறான், 'எப்படியும் யாரும் முதலாளி இல்லையே யாரிடமோ கை நீட்டிச் சம்பளம்தானே வாங்குகிறோம். அலுவலக முதலாளியிடம் வாங்கும் சம்பளத்தை வீட்டு முதலாளியிடம் வாங்கிவிட்டுப் போகிறேன், என்ன வேறுபாடு? அலுவலகமென்றால் சட்ட திட்டங்கள் நேரம் காலமெல்லாம் இருக்கும், இந்த வேலைக்கு அப்படி இல்லையே. நம்மை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள், நாம் போகும் நேரத்திற்குப் போகலாம். நிறைய வீட்டில் வேலை செய்தால் நிறையப் பணம், சில வீட்டில் வேலை செய்தால் குறைந்த பணம் அவ்வளவுதானே?' என்கிறான். என்ன சொல்லிப் புரிய வைக்க?!" என்றார்.

வேலையில் கௌரவம், ஏற்றத் தாழ்வு, மரியாதை, பெரிய வருமானம், வசதி என்று எந்த எதிர்பார்ப்புமே இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எளிமையாகிவிடுகிறது.

படித்ததில் பிடித்தது!

நன்றி அஷோக்குமார்

5 மணிக்கு அலாரம் வைத்து,
5.30 க்குள் காபி கொடுத்து,
6.30 க்குள் breakfast செய்து, அவருக்கு தனியாக lunch செய்து, இடையே குழந்தைகளை குளிப்பாட்டி,
7.30 க்குள் உணவு ஊட்டி
8 மணிக்குள் பஸ்ஸில் ஏற்றி,

ஆறஅமர எழுந்த கணவன் ஆபீஸ் போக ரெடியாக அவருக்கும் lunch box ready செய்து, அரக்க பறக்க அனுப்புவதற்குள்
ஐந்தாறு முறை திட்டுவாங்கி, போகும் போது உதிர்த்திடாத புன்னகைக்கும் ஒருமுறை மனம்வருந்தி, நேற்றைய இரவின் மிஞ்சிய உணவை சூடுபடுத்தி கொஞ்சம் தின்று, சமைத்து போட்ட பாத்திரங்கள் கழுவி, ஊறவைத்த துணிகளை துவைத்து, வீடு மொத்தம் பெருக்குவதற்குள் நான்கு சீரியல் முடிந்திருக்கும் ஒருத்திக்கு எதற்கு சமைக்கனும் என்று காலை சமைத்ததை காலிசெய்து கொஞ்ச நேரம் படுக்கபோனால் கோபத்தோடு கணவனின் போன்,

சமைத்த உணவில் குற்றம்கண்டு சகட்டுமேனிக்கு திட்டுகள் வாங்கி, வெறுப்பாய் எழுந்து வெளியே சென்று காய்ந்த துணிகளை கொண்டுவந்து கவனமாக ஐரன் செய்து அடுக்கிவைத்து திரும்புவதற்குள் அனுப்பிய குழந்தைகள் திரும்பிவிடும், குடிக்க கொஞ்சம் கொடுத்துவிட்டு, காக்காய் குளியல் குளித்துவிட்டு வராத பாடத்தை வரவழைக்க வாய்வலிக்க சொல்லித்தந்து, இடையில் இட்லிக்கு ஊறப்போட்டு, தாலிகட்டியவர் வருவதற்குள் தயாராய் dinner இருக்கவேண்டும், ஆபிஸில் வாங்கிய திட்டுக்களை எல்லாம் அப்பாவி என்மேல் கொட்டிவிட்டு, tv முன்னால் அமர்ந்துகொண்டு செய்திச்சேனலே கதியென்பார், வேண்டிய உணவை செய்துகொடுத்து பிள்ளைகளுக்கும் ஊட்டிவிட்டு தூங்க வைத்து பாத்திரம் கழுவி,

கதவை சாத்தி
கைகால் அலம்பி படுக்கச்சென்றால்
பக்கத்து வீட்டுக்கே கேட்குமளவுக்கு கொர்ர்ர் என்று கொரட்டை சத்தம்,
ஒரு நாள் என்றால் பரவாயில்லை,
ஒவ்வொரு நாளும் இதுதான்,

காலைமுதல் பட்ட கஷ்டங்கள் ஒற்றையணைப்பில் சருகாகும், அந்த ஒற்றையணைப்பை வேண்டி நிற்கும் ஒவ்வொரு நாளும் ரணமாகும்,
உறங்கமுடியா ஓரிரு நாளில் வலியச்சென்று விரல்பிடிப்பேன், விருட்டென்று விசிறியடிக்க
விசும்பியழுது உறங்கிப்போவேன்,

உடலின் தேவைகள் ஒருபுறம், உள்ளத்தின் தேவைகள் மறுபுறம், அவருக்கென்று வந்தால் மட்டும் அடிமைப்பாய் விரிக்கவேண்டும்,
அதுவும் கூட ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை
நரகம் என்பது வானில் இல்லை, கட்டியதாலியை காரணம்காட்டி கால் இன்ச் காதலையும் காட்டமறந்து கற்பழிக்கப்படும் மனைவிகளை கேளுங்கள் நாளும் எம்வீட்டில் நடக்கிறது நள்ளிரவில் என்பார்கள்!
மலடி என்பதன் ஆண்பால் எழத மறுக்கப்பட்ட பெண்குலம் இது!

குழந்தைக்காகவோ குடும்பத்திற்காகவோ கொடுத்தழிக்கிறோம் ஜென்மத்தை, மனதை அழுத்தி, மனநிலை பிறழ்ந்து மருத்துவனிடம் செல்கையில் மாத்திரை கொஞ்சம் கொடுத்தனுப்புவான், அவை வெறும் மாத்திரைகள் அல்ல மெல்ல அணைத்து
ஆறுதல் தந்து கணவன் தரவேண்டிய தூக்கத்தை
காதலின்றி காரணமின்றி
காலங்காலமாய் தந்தருளும் கடவுளுக்கு நிகரான இரண்டாவது கணவன்!

இரண்டாவது கணவன் இல்லையென்றால் முக்கால்வாசி முதல்கணவன்கள் முறுக்கிக்கொண்டு திரியமுடியாது மார்பைத்தொடாத மானங்கெட்ட மீசையை..!

----அஷோக்குமார்