அமீரகத்தில் மெகா இஃப்தார்..

ஒரு தனிநபர் வழங்கிய அமீரகத்தின் மெகா இஃப்தார் அரபு ஊடகங்களில் இடம் பெற்ற நிகழ்வு நடைபெற்றது..
ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனமான தனூப் குழுமத்தின் சேர்மன் ரிஸ்வான் சர்ஜுன் ஏற்பாட்டில் ஒரு லட்சம் பேருக்கு இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது.
யுஏஇ முழுவதும் தேர்வு செய்யப்பட்ட
14 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப்ளூ ஷர்ட் தொழிலாளிகள், துப்புரவு பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளிகள் உட்பட ஒரு லட்சம் பேருக்கு உணவுகள் பரிமாறப்பட்டது.
முஸ்லிம் பணியாளர்கள் தங்களது முஸ்லிமல்லாத நண்பர்களையும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்...
இதற்காக தனூப் குழுமத்தின் ஊழியர்கள் மேற்பார்வையில் சமையல் மற்றும் விநியோகம் செய்ய 4000 பேர் பணியமர்த்தப்பட்டனர்...

ஒரு குறுகிய அறிமுகம்...
-------------+++++-----------------------
தனூப் குழுமத்தின் சேர்மன் ரிஸ்வான் சர்ஜுன் மும்பையை சேர்ந்தவர்.
18 வயதில் மும்பை வீதிகளில் பத்திரிகை விநியோகம், அதிகாலை பால் போடுதல் போன்ற வேலைகளை செய்தவர்.
1990ல் துபாய் வந்து பல்வேறு வேலைகளை செய்தவர்.
1995ல் தனது சுய முயற்சியால் தனூப் குரூப் எனும் பெயரில் கட்டுமான பொருட்கள் சில்லரை விற்பனை துவங்கி படிப்படியாக முன்னேறிய ரிஸ்வான் சர்ஜுன், இன்று யுஏஇ முழுவதும் பிரபலமான
Danub Group of Company பெயரில் Building Materials விநியோக துறையில் முன்னணியில் இருப்பதுடன், 
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அரபுலகின் 100 இந்திய முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சாதனையாளர்..
நன்றி Colachel Azheem