தாய்லாந்து மக்களுக்கு
சவூதி அரேபியா மன்னரின்
இந்தாண்டு ரமலான் அன்பளிப்பாக
"தாய்" பாஷையில் மொழிபெயர்க்கப்பட்ட சுமார் 50000 திருக்குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள், தாய்லாந்து அரசு பிரதிநிதிகள் முன்னிலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது..
சவூதி அரேபியா மதீனாவில்
கிங் ஃபஹத் காம்ப்ளக்ஸில் அச்சடிக்கப்பட்ட திருக்குர்ஆன் தாய் மொழிபெயர்ப்பு பிரதிகள் மூன்று வெவ்வேறு அளவுகளில் அச்சடிக்கப்பட்ட தாகவும், பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பிரெய்லி வடிவிலான திருக்குர்ஆன் பிரதிகள் உட்பட மொத்தம் 50060 பிரதிகள் தாய்லாந்து அனுப்பி வைக்கப்பட்டது என்றும் சவூதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் அஷ்ஷேக் தெரிவித்தார்...
பல்வேறு நாடுகளின் 76 மொழிகளில் அச்சடிக்கப்பட்ட திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் உலகம் முழுவதும் கடந்தாண்டு 345 மில்லியன் பிரதிகள் சவூதி அரேபியா மன்னர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...
நன்றி Colachel Azheem