Implications of Tata ~ Apple deal


கடந்த புதன்கிழமை டாடா 11 ஆயிரம் கோடி செலவில‌ Apple Manufacturing Unit ஆரமிக்க போறதா ஒரு செய்தி வெளியானது. அதனோட effect பத்தி ஒரு குட்டி மினிபைட் பாப்போம்.



Apple comany ah பொருத்தமட்டில் அதோட assembling section தான் இந்தியால இருக்கே ஒழிய, manufacturing வெளிய தான் இருக்கு. வெளிய இருந்து மொபைல் இங்க இறக்குமதி ஆகுறனால தான் Apple இங்க கொள்ள ரேட்டுக்கு விக்கிது.

1. இப்போ இந்தியால manufacturing unit வச்சிட்டா ஆப்பிள் ரேட் குறைஞ்சிடுமா ?

கண்டிப்பா குறையும். வெளிநாட்டுல இருந்து வர பொருளுக்கு GST + Custom Duties tax போடுவாங்க.

இதனால ஒரு ஆப்பிள் போன் இப்போ இறக்குமதி ஆகும் போது 18℅ GST வரிதொகையும், 20% Custom duties 
um , 2% cess வரியும் கட்டனும்.

ஆனா இந்தியால தயாரிக்கிற மொபைலுக்கு வெறும் GST தொகை 18℅ மட்டுமே வசூலிக்கப்படும். இதனால கிட்டத்தட்ட 15 - 20 ஆயிரம் வரை மொபைல் ரேட் குறைய வாய்ப்பு இருக்கு.

2‌. ஒரு வேளை ஆப்பிள் அதே ரேட்டுக்கே மொபைல் வித்தா ?

நம்ம டிக்டோக் பேன் பன்னும் போது , மேலும் சீன பொருள்கள் உபயோகிப்பதை குறைக்க வேணும். அதுக்கு இந்தியால அந்த பொருள்கள் எல்லாத்தையும் தயாரிக்க வேணும். அதுக்கு அரசு தரப்பில இருந்து ஊக்கதொகையோ அல்ல வரிவிலக்கோ அளிக்க வேண்டும்னு Product linked incentive னு ஒரு scheme launch பன்றாங்க. இதுக்கு கீழ automobile telecom னு ஒரு 10 sector வருது. இதுல முதல் திட்டமா ஆப்பிள் project தான் வருது. இது மூலியமா கிட்டதட்ட 4 -6% வரை incentive கிடைக்கும்.

அது மட்டுமில்லாம fab தயாரிக்கும் நிறுவனங்களுகென்று பிரத்தியேகமாக 25% incentive வழங்க SPECS எனும் திட்டத்தையும் Ministry of Electronics & Information Technology வகுத்துள்ளது. அதுவும் டாடா க்கு ஒரு லாபம்.

3. அது என்ன fab?

நம்ம மொபைல இருக்க குட்டி குட்டி circuit, chip, semiconductors , இதெல்லாம் தயாரிக்கும் unit ah தான் fab னு சொல்வாங்க. இதுக்கு ஊக்கதொகை வழங்க தான் Scheme for the Promotion of Electronic components and semiconductors ( SPECS ) ஆரமிக்கிறாங்க.

4. இது எப்போ கட்டி முடித்து நடைமுறைக்கு வரும் ?

ஆரம்பத்தில நம்ம இந்தியாவோட‌ electronic hub ஆன பெங்களூரில் தான் முதல ஆரமிக்க போறதா சொன்னாங்க. இப்போ அந்த project ah TamilNadu Government தூக்கிட்டு வந்துருச்சு. Fab ஆரமிப்பதற்காக கிட்டத்தட்ட 500 acre நிலத்தை Hosur இல் ஒதுக்கியுள்ளது TamilNadu Industrial Development Corp.

5. எல்லாம் சரி. இதனால நமக்கு என்ன லாபம் ?

நாடு னு பாக்குறப்ப , நிறைய fab இந்தியா ல ஆரமிச்சா, இந்தியால இருந்து electronic ஏற்றுமதி‌ அதிகமாகும்.
இதனால Forex அதிகரிக்கும். Subsequently GDP யும் ஏற்றம் காணும்.

தனி மனிதனு பாக்குறப்ப, oneplus வாங்குறவங்களும் ஆப்பிள் மொபைல் வாங்கலாம். 

நன்றி 🙏💕