பல தடைகளையும், படிக்கற்களாக மாற்றி இருக்கும் Thyrocare நிறுவனத்தின் தலைவர் வேலுமணி அவர்கள்.

கோவை அருகே அன்றைய நிலையில் மின்சார வசதியும், பேருந்து வசதியும் இல்லாத சின்னஞ் சிறிய கிராமமான அப்பநாயக்கம்பட்டி புதூரில் நிலமில்லா விவசாயிக்கு மகனாக பிறந்தவர், Thyrocar நிறுவனத்தை தொடங்கிய டாக்டர்.வேலுமணி அவர்கள்.



Thyrocare நிறுவனம் நோய் தடுப்பு மற்றும் சுகாதார சோதனை ஆய்வகங்களை (diagnostic and preventive care laboratories) கொண்டுள்ளது. முக்கியமாக தைராய்டு சோதனைகள், மனித இரத்த மாதிரிகள் சோதனை உள்ளிட்ட 200 மேற்பட்ட சோதனைகளை செய்கிறது. இந்தியா மட்டுமல்லாது நேபால், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1,150 க்கும் மேற்பட்ட மையங்கள் கொண்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 3700 கோடி ரூபாய்.

என்ன ஒரு அற்புதமான மனிதர் டாக்டர் ரேலா


மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்த முஹம்மது ரேலா சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமும்  அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்ற டாக்டர் ரேலா எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு M.S பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் அவர் FRCS பட்டமும் பெற்றவர். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணரான அவர் உலகப்புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரியில் 1991 முதல் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

1997 ம் ஆண்டு பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தவர்.

அந்தச் சாதனைக்காக, 2000ம் ஆண்டு டாக்டர் ரேலா வின் பெயர் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றது.