நேர்மறை சிந்தனைகள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
34.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.–லியோ டால்ஸ்டாய்
`
35.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.– கண்ணதாசன்
`
36.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.
`
37.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.–சுகி செல்வம்
`
38.நேற்று,இன்று,நாளை ;
இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் – ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்…. ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான் — ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.
`
39.முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும்.–லேனா தமிழ்வாணன்.

http://www.maalaimalar.com/2013/05/14151553/Some-ways-to-grow-a-positive-a.html

 

இரத்த தானம் செய்வோம்


இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:
தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
தூய இரத்தம் – 35 நாட்கள்
இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்
இரத்தத் தட்டுக்கள் 5 நாட்கள்
பிளாஸ்மா 1 வருடம்
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

இரத்த தானம் செய்வோம்

நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை , உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதோடு, உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ரத்தம் உள்ளது. ரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசய பொக்கிஷம்.


அறிவியலில் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும்,நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருந்தாலும்,ரத்தம் என்ற அதிசய திரவத்தை,செயற்கையாக இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
.
நம் உடலில் உள்ள ரத்தம், காயபட்டவர்களுக்கும், ரத்தம் தேவைபடுவோர்க்கும் வழங்க கூடிய ஒரு பரிசுப்பொருள்.விபத்துகளின் போது ரத்த இழப்பை ஈடுசெய்ய தற்றவர்களின் ரத்தம் தேவைபடுகின்றது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போதும் கூடுதலாக ரத்தம் தேவைபடுகிறது. நாம் ஒவ்வொரு முறையும் தானமாக்க கொடுக்கும் ஒரு யுனிட் ரத்தமும் பல உயிர்களை வாழ வைக்கும்.

இரத்த தானம் செய்வோம்


இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள் 



* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 1216 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
 
இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:
மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:
இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

Thanks to Inneram.