இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் மீண்டும் முகேஷ் அம்பானி தக்க வைத்துக் கொண்டுள்ளார்

புதுடில்லி : இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் என்ற பெருமையை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

உலகின் புகழ் பெற்ற, "போர்ப்ஸ்' பத்திரிகை, இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மூன்றாவது முறையாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய். இரண்டாவது இடத்தை இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய். மூன்றாவது இடத்தை விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு, 79 ஆயிரம் கோடி ரூபாய். கடந்தாண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி, இந்த முறை ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் எஸ்ஸார் நிறுவன சகோதரர்கள் சரி, ரவி ருயா ஆகியோரும், ஐந்தாவது இடத்தை சாவித்ரி ஜிண்டாலும் பிடித்துள்ளனர். பெண் தொழிலதிபர் என்ற முறையில் பெருமை பெற்றவராகிறார். இந்த பட்டியலில் கடந்தாண்டை விட, இந்தாண்டில் 17 பேரின் பெயர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. மேலும், இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களின் ஆஸ்தி மொத்த அளவும் அதிகரித்திருக்கிறது.